மட்டு. நகரில் பிரபல சுற்றுலா விடுதி உரிமையாளர் மரணம் !

(ரீ.எல்.ஜவ்பர்கான்)

மட்டக்களப்பு நகரில் பிரபல சுற்றுலா விடுதி (சதுனா ஹோட்டல்) உரிமையாளர் மர்மமான முறையில் மரணமான சம்பவம் தொடர்பக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

59 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான செல்வசாரா ஞானரஞ்சன் என்ற குறித்த விடுதி உரிமையாளரின் சடலத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் எஸ்.கிரிசுதனினினால் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் நெகடிவ் நிலையைக் காட்டியபோதிலும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லையெனவும் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் கிரிசுதன் தெரிவித்தார்.

 பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த அறையை உடைத்துப் பார்த்தபோது உரிமையாளர் இறந்த நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 மட்டக்களப்பு தலைமைய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டுள்ளனர்.