PCR பரிசோதனையின் போது வலி ஏற்பட்டதால் ஆத்திரமடைந்தவர் பீங்கானினால் தாதியின் தலையில் தாக்குதல்

 

தாதி உத்தியோகத்தர் ஒருவரை பீங்கான் கோப்பையினால் தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த தாதி குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனமடுவ ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை விடுதிப் பிரிவில் பணியாற்றிவரும் தாதி ஒருவர் மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காய்ச்சல் காரணாமக ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆனமடுவ குமாரகம விகாரையின் பிக்கு ஒருவர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பிசிஆர் பரிசோதனையின் போது வலி ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பிக்கு அருகிலிருந்த பீங்கான் கோப்பையை எடுத்து தாதியின் தலையில் அடித்துள்ளார்.

இதன்போது தலையில் காயங்களுக்கு உள்ளான நிலையில் தாதி நிலத்தில் விழுந்துள்ளார்.

இதனையடுத்து வைத்தியசாலையின் தாதியர்கள் உள்ளிட்ட சேவையாளர்கள் தாதியை உடனாயாக மீட்டு சிகிச்சை உட்படுத்தியுள்ளனர்.

அத்துடன் குறித்த பிக்குவையும் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்த தாதி மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.