கொரோனா மரணங்கள்; காரணம் சொன்ன ரணில்



தற்போது ஏற்படும் கொரோனா மரணங்களுக்கு கொரோனா ஒழிப்பு செயலணியே காரணம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

வீடியோ தொழிநுட்பம் மூலம் கொழும்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டபோதே இவ்விடயத்தை அவர் தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு செயலணியை உடனடியாக கலைக்க வேண்டும் மற்றும் சட்டத்தால் நிறுவப்பட்ட குழு மூலம் கொரோனாவை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், இல்லையெனின், 21 ஆம் நூற்றாண்டில் இலங்கை பெரிய கண்டியாக மாறும் அபாயம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கொரோனாவுக்கு எதிரான அரசாங்கத்தின் அடக்குமுறை தோல்வியடைந்துள்ளது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர், நெருக்கடியை சமாளிக்க நீண்ட கால அனர்த்த முகாமைத்துவ மன்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.