தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20-30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர்

தடுப்பூசிகள் ஆண்மைக்குறைவு கருவள பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்ற கட்டுக்கதைகள் காரணமாக கொழும்பில் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயங்குகின்றனர் போல தெரிகின்றது இது முற்றிலும் தவறான கருத்து என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக ஆண்மைக்குறைவு ஏற்படலாம் என சிறிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் தடுப்பூசிகளால் இத்தகைய ஆபத்துக்கள் உள்ளன என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஏனைய சிலர் வெளிநாட்டில் குடியேறும் திட்டம் காரணமாகவும் வெளிநாட்டிற்கு செல்லும் திட்டம் காரணமாகவும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வில்லை அவர்கள் சில மருந்துகளிற்காக காத்திருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்ள்ளார்.

வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்வது உறுதியாகிவிட்டால் மாத்திரமே அவ்வாறு காத்திருப்பது உகந்தவிடயம் வெளிநாட்டு பயணம் உறுதியாகாவிட்டால் தடுப்பூசிகளை தவிர்த்துக்கொள்வது புத்திசாலித்தனமான விடயமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.