தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி


தெரிவு செய்யப்பட்ட சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் விசேட அனுமதிப்பத்திரம் கொண்ட இடங்களில் மதுபான விற்பனைக்கு மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வௌியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

தெரிவு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ள வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தனிமைப்படுத்தல் காலப்பகுதியில் Bio Bubble முறைமையை பின்பற்றும் முதலாம் மற்றும் இரண்டாம் மட்டத்திலுள்ள ஹோட்டல்களில் மது பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.