முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்புஇந்த மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து தபால் நிலையங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரம் தபால் நிலையங்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திங்கள், செவ்வாய், வௌ்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தபால் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.