வாழைச்சேனையில் 20 ரூபாவுக்கு ஐஸ்கிரீம் வாங்கி 84 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்ட இளைஞன்


வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற இளைஞன் அங்கு இருபது ரூபாய்க்கு ஐஸ்கிரீம் ஒன்றை வாங்கி விட்டு அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் சென்றுள்ள சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் அமைந்துள்ள வர்த்த நிலையம் ஒன்றிலே இத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 ஐஸ்கிரீம் வாங்கிய குறித்த இளைஞன் கடைக்கு அருகில் நின்றுள்ளார். இதனை அவதானிக்காத கடையில் இருந்த பெண்மணி கடைக்கு பின்னாலுள்ள அறைக்குள் சென்றுள்ளார். பெண்செல்வதை அவதானித்த அந்த இளைஞன் கடைக்குள் புகுந்து அங்கிருந்த 84,000 ரூபாய்க்கும் மேற்பட்ட பணத்தை திருடிச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கெமராவில் பதிவாகியுள்ளது. 

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது