வாழைச்சேனை பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் கைது!

 


மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வடமுனை மற்றும் ரிதிதென்னை பகுதியில் அனுமதிப்பத்திரங்களை மீறி உழவு இயந்திரம் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தி மண் அகழ்வில் ஈடுபட்ட 6 பேரை விசேட அதிரடிப்படையின் நேற்று (செவ்வாய்க்கிழமை)  கைது செய்துதுடன் 3 உழவு இயந்திரம் 3 கனரக வாகனங்களை மீட்டு ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

வடமுனை ஊத்துச்சேனை பகுதில் சம்பவதினமான நேற்று விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் அனுமதிப்பத்திரத்தை மீறி உழவு இயந்திரத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 3 உழவு இயநதிரத்தை மீட்டனர்.

அதேவேளை ரிதிதென்னை பகுதில் அனுமதிப்பத்திரத்தை மீறி கனரக வாகனத்தில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்ததுடன் 3 கனரகவாகனங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களையும் வாகனங்களையும் விசேட அதிரடிப்படையின் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.