பாடசாலை விடுமுறைகள் – பரீட்சைகள் குறித்து கல்வியமைச்சின் அறிவிப்பு


நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாத பாடசாலை விடுமுறை விபரங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, தொடர்புடைய விடுமுறை திகதிகள் பின்வருமாறு:
நத்தார் விடுமுறைக்காக டிசம்பர் 23, 24, 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் அனைத்து பாடசாலைகளும் மூடப்படும்.

* 03 பெப்ரவரி 2022 முதல் மார்ச் 3, 2022 வரையிலான க.பொ.த உயர்தர பரீட்சை விடுமுறைகள்(ஆரம்ப பிரிவு வகுப்புகள் தவிர்த்து)

* ஏப்ரல் விடுமுறைகள்: ஏப்ரல் 09 முதல் 17, 2022 (சிங்கள / தமிழ் பாடசாலைகள்)

* ஏப்ரல் விடுமுறைகள்: ஏப்ரல் 01 முதல் மே 03 வரை (முஸ்லிம் பாடசாலைகள்)

மேலும், உயர்தரம், சாதாரணதரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

* தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : 22 ஜனவரி 2022

* க.பொ.த உயர்தர பரீட்சை: 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை

* க.பொ.த சாதாரண தர பரீட்சை : 2022 மே 23 முதல் ஜூன் 1 வரை