படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம்திருகோணமலை − கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு ஒன்றில் ஆற்றை கடக்க முயன்ற 20 மாணவர்களை ஏற்றிய படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட ஐந்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

7 மாணவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.