மசாஜ் நிலையம் என்ற பெயரில் மோசமான செயல் பலர் சிக்கினா்!கல்கிஸை பிரதேசத்தில் தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதில் ஏழு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்தனா்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

20 – 48 வயதுக்கிடைப்பட்ட மொரட்டுவை, ரத்மலானை, பொல்கசோவிட, யட்டியந்தோட்டை மற்றும் பொரலந்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.