சுகாதார ஊழியர் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கான மருந்துகளை இலவசமாக வழங்க அரச மருந்தகற் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வைத்தியசாலைகள் மூலம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு தேவையான மருந்துகளை நாடு முழுவதுமுள்ள 48 ஒசுசல விற்பனை நிலையங்கள் மூலம் பெற்றுக்கொடுக்க சுகாதார அமைச்சின் ஆலோசனை கிடைத்துள்ளதாக அதன் பதில் தலைவர் டொக்டர் டி.பி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் வேலை நிறுத்தம் காரணமாக கிளினிக் மற்றும் ஏனைய நோய்களுக்காக வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து சிட்டைகளுக்கான மருந்தை இலவசமாக வழங்குவதற்கு இதன் மூலம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மருந்துகள் வழங்கப்படாமை காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு செலவாகும் பணத்தை சுகாதார அமைச்சு மூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் மருந்துகள் வழங்கப்படாமை காரணமாக இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு செலவாகும் பணத்தை சுகாதார அமைச்சு மூலம் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.