(ரவ்பீக் பாயிஸ்)
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற முல்லைத்தீவை சேர்ந்த தங்க மங்கை குத்துச்சண்டை வீராங்கனை இந்துகா கணேஷ் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு திருமலையில் இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சார்பில் திருகோணமலை விபுலானந்தா இந்துக் கல்லூரியின் அதிபர் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ஆதீனகர்த்தா சோ. ரவிச்சந்திர குருக்கள் அவர்களின் ஆசீர்வாதத்துடன் திருகோணமலை புனித மரியாள் மகளிர் கல்லூரி மாணவிகளின் பேண்ட் இசை வாத்திய குழுவினரின் அணிவகுப்புடன் இன்று (16) திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற இரண்டாவது குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்துகா கணேஷ் அவர்கள் தனக்கும் தனது மாவட்டத்திற்கும் அல்லாது முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்ததை கெளரவிக்கும் வகையில் திருகோணமலை மக்கள் சார்பில் இவ் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்நிகழ்வில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருள் திரு நோயல் இம்மானுவேல் ஆண்டகை அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இன்றைய கதாநாயகியாக கௌரவிக்கப்பட்டு வரும் இந்துகா கணேஷ் அவர்கள் பாகிஸ்தான் லாகூர் நகரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றமன் பின்னரே இவரின் பின்புலம் என்ன அனைவரும் ஆராய ஆரம்பித்துள்ளனர் ஒவ்வொரு மாணவர்களினதும் ஒவ்வொரு திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு சரியான ஒரு களத்தை அமைத்துக் கொடுத்திருந்தால் இன்று தனிநபராக கௌரவிக்க படும் இந்துகா கணேஷ் போன்று இன்னும் பலர் எமது நாட்டில் கௌரவிக்கப்பட்டு இருப்பார்கள் என தெரிவித்தார்
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தங்கமங்கை இந்துகா கணேஷ் அவர்கள் நாட்டின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து எந்த ஒரு உதவிகளும் இன்றி தான் இந்த தங்கப்பதக்கத்தை வென்றதாகவும்
இவ்வாறு வெல்லப்பட்ட தங்கப்பதக்கத்தை வென்றது மாத்திரமே எமது சமூகமும் முழு நாடும் அறிந்து இருக்கின்றதே தவிர அன்றைய போட்டிக்கு பாகிஸ்தானுக்கு செல்வதற்கு எந்த ஒரு அரசியல் தலைமைகள் ஏனையவர்களின் உதவியின்றி மிகவும் சிரமப்பட்டு ஒருசிலரின் தனிப்பட்ட உதவினால் மாத்திரமே பாகிஸ்தான் சென்று தான் இந்த தங்கப்பதக்கத்தை வென்றதாகவும் கவலை தெரிவித்தார்
மேலும் தனது எதிர்கால இலட்சியமாக எதிர்வரும் ஆசிய போட்டிகளில் இலங்கை நாட்டிற்காக போட்டியிட்டு தங்கப் பதக்கம் வெல்வதும் அதனைத் தொடர்ந்து சந்தர்ப்பம் கிடைத்தால் சர்வதேச ஒலிம்பிக் போட்டியிலும் பங்குபற்றுவதும் தனது அவாவாக இருப்பதாகவும் தெரிவித்தார்
நிச்சயமாக அரசாங்கத்தினால் அதற்குரிய உதவிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தான் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் தவறாது கலந்து கொள்ள தயாராக உள்ளதாகவும்
ஒரு சில ஊடகங்களில் தான் அயராது உழைத்த வெற்றியினை துச்சமாக கேவலமாக ஒளிபரப்பு மற்றும் பிரசுரங்கள் செய்து வருவதாகவும் வளர்ந்துவரும் ஒரு வீராங்கனையான என்னை நாட்டின் ஊடகம் என்ற வகையில் ஊக்குவிக்க வேண்டுமே தவிர விமர்சனங்களுக்கு உள்ளாகி தன்னை ஒடுக்க வேண்டாம் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுத்திருந்தார்
மேலும் நாட்டின் பின்தங்கிய கிராமத்திலிருந்து வந்த என்னை இந்த நாடு மட்டுமல்லாது உலக நாடு வரை வெளிக்கொணர்ந்த பல ஊடகங்கள் இருக்கின்றன அவ் ஊடகங்களை நான் குறைகூறவும் இல்லை அவர்களுக்கு மென்மேலும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்
மேலும் பல சமூக வலைத்தளங்களில் புலம்பெயர் தமிழர்களின் ஊடாக நிதி சேகரிப்பதாகவும் பல விமர்சனங்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் தான் யாரிடமும் தனக்கு நிதி தேவை என இதுவரை கேட்டதில்லை எனவும் தனது துறையினை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்க்கும் திறமை தகுதி இருந்தும் தன்னை போன்று சந்தர்ப்பம் இல்லாமல் இருக்கின்ற வீரர்களை உருவாக்கி எனது திறமையை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் எனவும் அவ்வாறு சமுக அக்கரை கொண்ட பல உறவுகள் தன்னை தொடர்பு கொண்டு உதவிகள் செய்து வருவதாகவும் அவ்வாறான உதவிகளை வேறுவிதமாக விமர்சிக்க வேண்டாம் எனவும் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்
மேலும் தங்க மங்கை இந்துகா கணேஷ் அவர்களுக்கு சன்மானம் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பொன்னாடை போற்றியும் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் இந்நிகழ்வில் புனித மரியாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிரோஷா, புனித சூசையப்பர் கல்லூரியின் அதிபர் அருட்தந்தை அல்பிரட் விஜயகமலன் அடிகளார் மற்றும் முன்னால் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி திருகோணமலை பிரஜைகள் குழு தலைவர் தேசமானி தயானந்த் ஜெயவீர மற்றும் மாவட்டத்தின் பிரபல வர்த்தகள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.