இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை - சந்திவெளியில் சம்பவம்


(ஷமி மண்டூர்)

சந்திவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மயில்வாகனம் வசந்தன் (27) என்பவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் நேற்று கண்ணகி நகர் பாவக்கொடிச்சேனை வவுணதீவு பிரதேசத்தில் இருந்து தனது தாயாரின் வீட்டுக்கு சென்று பின்னர் தான் தொழிலுக்கு செல்வதற்கு செல்வதாக கூறிச்சென்றதாகவும் சம்பவ தினத்தன்று தனது தாயரின் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த நிபர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.