புதிய அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப்போவில்லை - பத்து சுயாதீன கட்சிகள்

 


பத்து சுயாதீன கட்சிகள் புதிய அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்பதில்லை என தீர்மானித்துள்ளன என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எனினும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதத்தில் செயற்படப்போவதில்லை என தெரிவித்துள்ள அவர் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களாகயிருந்தவாறு அரசாங்கத்தின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பொருளாதார ஸ்திரதன்மையை ஏற்படுத்தமுடியும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் ரணில்விக்கிரமசிங்க எனவும் தெரிவித்துள்ளார்.