ரணிலின் வருகையால் வலுவடைந்த இலங்கை ரூபா


புதிய பிரதமராக ரணில் பதவியேற்ற பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை வலுவடைந்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல தனியார் வங்கிகள் ஒரு டொலர் ஒன்றின் விற்பனை விலை 365 ரூபாவாகவும், ஒரு டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 355 ரூபாவாகவும் அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 380 ரூபாவாகவும், கொள்வனவு விலை 365 ரூபாவாகவும் காணப்பட்டதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.