140,000 லீற்றர் எரிபொருள் பொலிஸாரினால் பறிமுதல்


கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 1,40,000 லீற்றர் எரிபொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 1077 சுற்றிவளைப்புகளில் 997 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அனுமதியின்றி எரிபொருளை வைத்திருந்தமை மற்றும் அதிக விலைக்கு எரிபொருளை பதுக்கி விற்பனை செய்ததாக கிடைக்க பெற்ற புகார்களின் அடைப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அதிகாரிகள் சோதனையில் 109,634 லிட்டர் டீசல், 33,847 லிட்டர் பெட்ரோல் மற்றும் 19,214 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.