உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் !

கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் ஆலயத்தின் எதிரேயுள்ள கடற்கரையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் நடைபெற்ற ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்ததில் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி உள் வீதி, வெளி வீதியுலா என்பன இடம்பெற்றன.

தீர்த்தோற்சவ தினமான வியாழன்(11) அன்று பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது,

தொடர்ந்து, திருப்பொற்ச்சுண்ணம் இடித்தல், பூஜை ஆராதனைகள், தேவார பாராயணங்கள் பாடி, மங்கல வாத்தியங்களுடன் ஆலயம் வலம் வந்து தீர்த்தக்கரையினை அடைந்தார்.

கடற்கரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அடியார்கள் புடை சூழ வேதங்கள்ஓத , நாதஸ்வர மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் முருகனுக்கு தீர்த்தோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.