திருக்கோவில் பிரதேச சபைக்கான இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிப்பு !


(வி.ரி. சகாதேவராஜா)

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கான உள்ளூராட்சி தேர்தலுக்கென சமர்ப்பிக்கப்பட்ட 11 வேட்புமனுக்களில் 02வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேச சபைக்கு 10 கட்சிகளும், 01சுயேச்சை அணியுமாக 11வேட்புமனுக்கள் நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக தேர்தல் பணிமனையில் கையளிக்கப்பட்டன.

அதில் ,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளின் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுவில் குறைந்தபட்ச பெண் வேட்பாளர் தொகை இல்லாமையினால் கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் ஐக்கிய தேசியக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு தாமதமாக கையளித்த காரணத்தினால் அது நிராகரிக்கப்பட்டது.

அங்கு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி,ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய ஜனநாயக முன்னணி, மற்றும் அருளானந்தம் ஜெயதரன் தலைமையிலான சுயேச்சைகுழு ஆகிய 11 வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாவிதன்வெளி பிரதேச சபைக்கான ஐ.தே.கட்சி வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது.