கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு!

தேசிய பாடசாலைகளுக்கு சிறுவர்களை அனுமதிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களுக்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வெளியிடுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அந்தந்தப் பாடசாலைக்கு பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.