மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் – ஈழத்து திருசெந்தூர் ஆலயம்.

(உ.உதயகாந்த்)

இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் பிரதான விரதங்களில் மிகவும் சிறப்பான விரதமாக கருதி உலக இந்துக்களால் கொண்டாடப்படுவது மஹா சிவராத்திரி விரதமாகும்.

சிவராத்திரியினை சிறப்புற பக்திபூர்வமாக கொண்டாடுமுகமாக கிழக்கிலங்கையின் புகழ்பூத்த மட்டக்களப்பு ஈழத்து திருசெந்தூர் முருகன் ஆலயமும் சிவானந்த ஆச்சிரமமும் இணைந்து எதிர்வருகின்ற 27.02.2014 வியாழக்கிழமை இரவு 7.00 மணி தொடக்கம் 28.02.2014 வெள்ளிக்கிழமை அதிகாலை 7.00 மணி வரை ஈழத்து திருசெந்தூர் முருகன் ஆலயத்தில் கணபதி ஹோமம், ம்ருயுஞ்ஜய ஹோமம், நான்குகால ருத்ர அபிசேகங்கள், ருத்ர பாராயணம், சிவ ஸஹஸ்ர நாம அர்ச்சனை, 1008 சங்காபிஷேகம், சத்சங்கம், பஜனை ஆகிய சிறப்பு பூசை நிகழ்வுகளை ஏற்பாடுசெய்துள்ளனர்.

இந்நிகழ்வினை சிறப்பிக்குமுகமாக அறநெறி மாணவர்களின் ஆன்மீக கலை நிகழ்ச்சிகளும், பிரசாதம், அன்னதானம் (மாகேசுவர பூஜை) என்பன நடைபெறவிருப்பதுடன்,  சங்காபிஷேகத்தில் பங்குபெற விரும்புபவர்களை முன்பதிவு செய்துகொள்ளுமாறும், பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு இனிய சிவராத்திரி நிகழ்வினை சிறப்பிப்பதுடன் சிவபெருமானின் அருளாசியினை பெறுமாறும் அழைப்புவிடுக்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.