சம்மாந்துறையில் சாரதியாக வேலை செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது

(அபிவரன் ) சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து சட்டவிரோதமாக சம்மாந்துறை நையினகாடு வயல்பிரதேசத்தில் வேளாண்மை அறுவடை இயந்திர சாரதியாக வேலை செய்த இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர் பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த பிரதேசத்தில் நேற்று பகல் 12 மணியளவில் நெல் அறுவடை இயந்திரத்தில் சாரதியாக வேலை செய்து கொண்டிருந்த போது இந்தியா தமிழ்நாடு விழிப்புரத்தைச் சேர்ந்த 26 வயதுடையவரை கைது செய்துள்ளனர் . இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.