மண்டூர் ஸ்ரீ .இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களுக்கான பதக்கம் சூட்டும் விழா


(விது)  மண்டூர் .ஸ்ரீ .இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களுக்கான வெள்ளை மற்றும் பச்சை வர்ணப்பதக்கம் சூட்டும் விழா  பாடசாலையின் அதிபர்.வே ஜெயரெட்ணம்  தலைமையில் அன்மையில் இடம்பெற்றது. 

இந்  நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதிக்கல்வி பணிப்பாளர்  திரு . T .நித்தியானந்தம் கலந்துகொண்டார் . இந் நிகழ்வுகள் அனைத்தும் சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர் செல்வி .வ .தமயந்தி ஆசிரியையின் நெறியாள்கையில் இடம்பெற்றன. 

இந் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடி மாணவர்களுக்கு வெள்ளை மற்றும் பச்சை வர்ண பதக்கங்கள் சூட்டப்பட்டதோடு  அம் மாணவர்களால் கழிவுப்பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சியும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் திரு .த .வரதராஜன்,சுற்றாடல் உத்தியோகத்தர் திரு . இ .யோகராசாபொலிஸ் அதிகாரி திரு .H .K.S.R.விக்கிரமசிங்க மற்றும் பெற்றோர்,S.D.C உறுப்பினர்கள்பாடசாலையின் ஆசிரியர்கள்மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.