உருத்திரா எழுதிய "ஆண்கோணி" எனும் கவிதை நூல் அறிமுக விழா

(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் த.உருத்திரா அவர்கள் எழுதிய "ஆண்கோணி" எனும் கவிதை நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை (21) மண்டூர் ஸ்ரீ இராமகிருஷ்ண கலாசார மண்டபத்தில் கலை இலக்கிய அவைத் தலைவர் எஸ்.புஸ்பானந்தன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றப்பட்டு பின்னர் வரவேற்பு உரையினை க.தேவானந்தம் நிகழ்த்தினார்.

அதனைத் தொடந்து அறிமுக உரையினை கலாநிதி சந்திரசேகரம் நிகழ்த்தினார் அவர் தனதுரையில் அண்மையில் உருத்திராவின் ஆண்கோணி கவிதை நூல் அறிமுகம் கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வெளியிடப் பட்டதாகவும் தற்போது கவிதைகள் விளைந்த மண்ணிலே இந்த கவிதைத் தொகுப்பு அறிமுகம் செய்யப்படுவதாகவும் இக்கவிதை நூலின் பெயர் ஆண்கோணி. ஆண்கோணி என்ற சொல்லானது. பல அர்த்தங்களை கொண்டுள்ளதாகவும் அவர் தனது அறிமுக உரையில் மிகவும் சிறப்புர எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து நூல் ஆய்வினை எழுத்தாளர் உமாவரதராஜன் இந்த ஆண்கோணி நூலின் கவிதைகள் எப்படியானவை என்றும் ஒரு பெண்ணின் கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளதாகவும் விரிவான கருத்துக்களை முன்வைத்தார்.

கருத்துரையினை பட்டிருப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் மற்றும் மட்டக்ளப்ப மாவட்ட கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வன் ஆகியோர் நிகழ்த்தினர். தொடர்ந்து வாழ்த்துரையினை கவிஞர்.பொன்.சிவானந்தன் நிகழ்த்தினார். இறுதியில் அதிபர்.சோ.தர்மசீலன் அவர்களின் நன்றியுரை இடம்பெற்றது.