மாருதத்தின் சித்திரை கொண்டாட்டம்

(படுவான் பாலகன்) படையாண்டவெளி மாருதம் விளையாட்டுக்கழகம் மற்றும் மாருதம் கலைக்கழகம் என்பன இணைந்து புத்தாண்டை வரவேற்று பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை தமது கிராமத்தில் நிகழ்த்தினர். பல கிராமங்களை சேர்ந்த தமது நண்பர்களை இணைத்து மகிழ்ச்சியாக கொண்டாடிய விளையாட்டு நிகழ்வில் சுவாரஸ்யமான பல்வேறு விளையாட்டுக்களாக தமிழோடு இரு நிமிடம், வினோத உடை, தியட்டரில் படம் பார்த்தல், நண்பிக்கு பொட்டு வைத்தல் போன்றவற்றுடன் பிரதேசவாரியான சில
விளையாட்டுக்களும் இடம்பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், மத்திஸ்தம் வகித்த பல கிராமங்களை சேர்ந்த நண்பர்களுக்கும் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டது.