அறிவீனத்தை அழித்து தனிமனிதர்களை அறிவாழியாக்கும் செயற்பாடே கற்பித்தலாகும். அதுவே ஒரு சமூகத்தின் வளர்ச்சியையும் நாகரீகத்தின் முன்னேற்றத்தையும் தீர்மானிக்கும் இயங்கு முழுமுதற் காரணியாகும். அந்த வகையில் இந்த கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர் மற்றும் அவர் கல்வி புகட்டும் மாணவர்களுக்கிடையிலான உறவு என்பது முக்கியம் வாய்ந்த ஒன்றாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் எனும் அடிப்படையில் ஒரு மனிதனுக்கு அம்மா, அப்பா எனும் உறவுகளுக்கு அடுத்ததாக இந்த குரு எனும் ஆசிரியர்கள் வைத்து போற்றப்படுகின்றனர்.
உலகில் காணப்படும் அனைத்து தொழில்களிலும் மேலான தெய்வீகத் தன்மை வாய்ந்த ஒரு தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. மற்றைய தொழில் துறையினரைக் காட்டிலும்; அதிகமான பொறுப்பும், முக்கியத்துவமும் வாய்ந்தவர்களாக இந்த ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். பெற்றோர்கள் குழந்தையை உலகிற்கு தருகின்றனர் ஆனால் ஒரு நல்ல ஆசான் அந்த உலகையே குழந்தைக்கு வழங்குபவர்களாக காணப்படுகின்றனர். நான் உயிருடன் இருப்பதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கின்றேன். ஆனால் சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். எனும் அலெக்ஸாண்டரின் கருத்தும் அதனையே பறைசாற்றுகின்றது.
ஒரு பிள்ளை பிறந்ததிலிருந்து ஐந்து அல்லது ஆறு வயது வரைக்கும் பெற்றோரின் வழிகாட்டலில் வளர்கின்றனர் அதற்கடுத்ததாக பாடசாலைக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரைக்கும் அப் பிள்ளையை வழிநடாத்தும் ஒரு நபராக இவ் ஆசிரியர் விளங்குகின்றனர். இங்கு பாடசாலைக் காலத்திலேயே பெரும்பாலும் இவர்களின் பங்கானது சிறப்பானதாக காணப்படுகின்றது. இன்றைய நிலையில் பெற்றோர்களின் அன்பானது பெரும்பாலான பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை காரணம் இன்றைய நவீன உலகில் பெற்றோர்கள் தொழிலுக்கு முக்கியத்துவமளித்து ஓடி ஓடி உழைக்கின்றனர் அதனால் அவர்கள் பிள்ளைகளை கவனிப்பதும் அவர்கள் மீது அன்பும் காட்டுவதில்லை அதனால் பிள்ளைகள் அவர்களுக்கு அடுத்து அன்பினை செலுத்தும் ஆசிரியர்களின் மீது கவரப்படுகின்றனர். மாணவர்கள் பெரும்பாலான நேரத்தை பாடசாலையிலேயே செலவிடுகின்றனர். உயர் கல்வியை பொருத்த வரையில் இதன் தன்மை மிகக் குறைந்த பட்சமே காணக்கூடியதாக உள்ளது. ஒரு சிற்பி ஒரு வடிவில்லாத கல்லை செதுக்கி உருவம் கொடுக்கின்றானோ அதே போல் ஒவ்வொரு பிள்ளையையும் சிறந்த ஒழுக்கமுடைய அறிவுமிக்க பிள்ளையாக மாற்றும் ஒருவராக ஆசிரியர் காணப்படுகின்றார்.
இவ் ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஆரம்ப கால குருகுல கல்வி தொடக்கம் இக்கால பாடசாலைக் கல்வி வரையிலும் பின்பற்றப்பட்டு வரும் ஒரு புனிதமான உறவாகும். அக் காலத்தில் மாணாக்கள் குருவின் இடத்திற்கு சென்று குருவிடத்தில் தங்கியிருந்து அவருடன் நெருக்கமான உறவை பின்பற்றி வித்தைகள், கல்வி, ஒழுக்க விழுமியங்களை பயின்றனர். இது குறிப்பாக அரசராட்சிக் காலங்களில் பெரிதும் நடைமுறையில் காணப்பட்டது. மகாபாரத கதையின் படி தன் குருவிற்காக ஏகலைவன் தன் பெருவிரலையே தற்சணையாக அளித்தான் இவ்வாறு அக்காலத்தில் குரு, சிஸ்யன் உறவு முறை நெருக்கமாக காணப்பட்டமையை அறியலாம். இது கால ஓட்டத்தில் திண்ணைக் கல்வி முறையாகவும் பின்னர் பாடசாலைக் கல்வியாகவும் மாற்றப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவ்வாறு மாற்றமடைந்த போதிலும் ஆசிரியர் மாணவர் உறவு என்பது முக்கியப்படுத்தப்பட்டு பின்பற்றப்பட்டே வருகின்றது.
இவ்வாறான ஆசிரியர் மாணவர் உறவு தற்காலத்தில் எந்தளவிற்கு பின்பற்றப்பட்டு வருகின்றது என்றால் முற்காலத்துடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் குறைவடைந்து கொண்டே வருகின்றது எனலாம். ஏன் சில இடங்களில் அவ் உறவு இல்லை என்றே கூறலாம். இன்று ஆசிரியர்கள், மாணவர்களுக்கிடையில் சண்டை எழுவதும் அது வன்முறையில் முடிவதை காணக் கூடியதாக உள்ளது. இதற்கான காரணங்களை தற்கால கல்வி நடவடிக்கைகள் மூலமும் , கல்வி நடவடிக்கைளில், ஆசிரிய மாணவர் செயற்பாடுகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
அந்த வகையில் ஆசிரியர் மாணவர்களுக்கென சில பொறுப்புக்கள் கடமைகள் மற்றும் பண்புகள் காணப்படுகின்றன அவற்றை ஒழுங்காக கடைப்பிடிக்க தவறும் பட்சத்தில் ஆசிரியர் மாணவர் உறவுக்கிடையில் பாரிய விரிசல் ஏற்படுகின்றது. இன்றைய தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டி நிலை காரணமாக அர்ப்பணிப்புடனும் புரிந்துணர்வுடன் ஆற்ற வேண்டிய ஆசிரிய தொழிலை ஓரு சிலர் பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே கருதி செயற்படுகின்றனர். இதனால் ஏதோ படிப்பித்தால் மட்டும் போதும் என்ற நிலையில் செயற்படுகின்றனர். அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களில் சில ஆசிரியர்களின் தவறான நடத்தைப்பாங்குகள் காரணமாக இவ் உறவு பாதிப்படைகின்றது .
ஆசிரியர்கள் பிள்ளைகளுடன் சகஜமாகவும், அன்பாகவும் பழகும் ஆற்றலைக் கொண்டிருத்தல் கட்டாயமானதாகும். ஆனால் இன்றைய நிலையில் அவ்வாறு எல்லோரும் நடந்து கொள்கின்றனரா என்றால் அது கேள்விக்குறியே சிலர் தங்கள் சுயநலன் மற்றும் கௌரவம் கருதியே செயற்படுகின்றனர். குழந்தைக்கு கற்பிக்கும் போது ஆசிரியரும் குழந்தையாக மாற வேண்டும் அப்போதுதான் கற்பித்தல் சிறப்படையும் அவ்வாறு இல்லாதவிடத்து இருவருக்குமான உறவு நிலையும் கற்பித்தலும் பாதிப்படைகின்றது. அத்தோடு பெற்றோர்களின் ஸ்தானத்தில் இருந்;து செயற்பட வேண்டிய ஆசிரியர்கள் மாணவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதும் வன்புனர்வுக்கு உட்படுத்துவதும், பாலியல் துஸ்பிரயோகம் செய்வதும் தற்கால உலகில் நடைபெறுவதை அவதானிக்கலாம் இதை எவரும்; மறுக்க முடியாது.
வகுப்பறையில் தாம் கற்பிக்க வேண்டிய கல்வியை கற்பிக்காமல் சில ஆசிரியர்கள் தனியார் கல்விநிலையங்களுக்கு மாணவர்களை அழைத்து பணத்திற்காக கற்பிக்கின்றனர் இதனால் பணம் இல்லாத வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்வதில் சிக்கல் எற்படுகின்றது இது மாணவர்கள் ஆசிரியர் மீது வெறுப்பு கொள்ள வழி ஏற்படுத்துகின்றது.
குறிப்பாக சில ஆசிரியர்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களை மாணவர்கள் மேல் திணிக்க முற்படுதல் அதாவது ஆசிரியர்கள் தங்கள் சொற்படியே மாணவர்கள் முற்று முழுதாக செயற்பட வேண்டும் என எதிர்பார்ப்பார்கின்றனர் இதனால் வெறுமனே கற்பித்தலுடன் மட்டுப்படுத்தி மாணவர்களை ஏனைய இணைப்பாட விதானங்களில் பங்குகொள்ள செய்வதில்லை இதனால் மாணவர்கள் சுதந்திரம் மறுக்கப்படுகின்றது. அதே போல் மாணவர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் செயற்படுதல் , தமது தேவைகளுக்காக மாணவர்களை பயன்படுத்திக் கொள்ளல், அதிகாரத்தின் அடிப்படையில் கல்வியை புகட்ட முனைதல், மாணவர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர் இன, மத, பால் நிலையில் பாரபட்சம் காண்பதும் போன்ற பல்வேறு காரணங்களை கூறலாம். சில ஆசிரியர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் மொத்த ஆசிரிய சமூகத்திற்கும் அவப்பெயர் ஏற்படுகின்றது.
அதே போல் மாணவர்களும் தங்களுக்கான கடமைகளை சரிவர செய்யாமல் மறுத்தல், ஓரு ஆசிரியர் கண்டிக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு மற்றும் சகிப்புத் தன்மை இல்லாமை ,இன்றைய நிலையில் மாணவர்களுள் பெரும்பாலானோர் தீய பழக்கவழக்கங்களுக்கு உட்படுகின்றனர் எனவே அதனை ஆசிரியர்கள் தட்டிக் கேட்கும் போது ஆசிரியர்கள் மீது தவறான புரிதலை ஏற்படுத்தி ஆசிரியர்களுக்கு அவதூறாக பேசுதல் ,அவர்களுக்கு எதிர்மாறாக செயற்படுதல், சமூகத்தில் ஆசிரியர்கள் பற்றிய தவறான அபிப்பிராயத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு காரணங்கள் மூலம் ஆசிரிய மாணவர் உறவு பாதிப்படைகின்றது.
அவ்வாறே சில பெற்றோர்களின் நடவடிக்கைகள் காரணமாகவும் உறவு நிலை பாதிப்படைகின்றது. அதாவது பெற்றோர்கள் ஆசிரியர்கள் பற்றி தவறான கருத்துக்களை மாணவர்கள் மேல் திணிப்பதனால் அதை பின்பற்றி அவர்கள் ஆசிரியர்கள் மேல் முரண்பாடு கொள்ள வழி அமைக்கின்றது. அதே போல் பெற்றோர்கள் ஆசிரியர் மீது கொள்ளும் தனிப்பட்ட முரண்பாடுகள் பெற்றோரினால் ஆசிரியர் மீது மாணவர்களை முரண்படும் நிலைக்கு தள்ளிவிடுகின்றது.
மேலும் இன்றைய நிலையில் காணப்படும் கற்பித்தல் முறைகளும் இவ் உறவில் தாக்கம் செலுத்துகின்றது. இன்றைய 21ம் நூற்றாண்டில் கற்பித்தலானது மாணவர் மையக் கல்வியாக மாற்றமடைந்துள்ளது. எனவே இங்கு ஆசிரியர் வகிபாகமானது நிலைமாற்று வகிபாகமாக காணப்படுகின்றது. அதாவது மாணவர் தேடிக் கற்றல் காணப்படுகின்றது எனவே ஆசிரியர்கள் மாணவர்கள் தேடியவற்றை கற்பிக்கும் பணியையே ஆற்றுகின்றனர். எனவே அவர்களுக்கிடையிலான உறவு சற்று குறைவடைந்து விட்டது என்றே கூறலாம். இதற்கு முன்னர் காணப்பட்ட கற்பித்தல் முறையில் ஆசிரியர் மாணவர் உறவு பலப்படுத்தப்பட்டது. ஏனெனில் அங்கே பாட மையக் கல்வி, ஆசிரியர் மையக் கல்வி பின்பற்றப்பட்டது. இங்கு ஆசிரியரின் வகிபாகம் கடத்தல் மற்றும் பரிமாற்று வகிபாகமாக காணப்பட்டது. எனவே ஆசிரியர் மாணவர் இடையிலான கருத்துக்கள் பகிரப்பட்டு உறவு சிறப்பானதாக அமைந்தது.
அதே போல் தற்போதைய நவீன உலகில் அறிமுகமாகிக் கொண்டு வரும் இணையக்கல்வி முறை காரணமாக இவ் உறவு நிலை முற்றாக இல்லாமல் போய் விட்டது. இம் முறையில்; ஆசிரியர் வேறு இடத்திலும் மாணவர் இன்னொரு இடத்திலும் இருந்து கொண்டு கல்வி கற்கும் தன்மையால் இருவருக்குமான உறவு பாதிப்படைகின்றது. இன்று எமது நாட்டில் இதன் தாக்கம் அதிகளவு இல்லை என்றாலும் இனிவரும் காலங்களில் இந்த முறை பெரும்பாலும் பின்பற்றப்படலாம் என்பதில் ஜயமில்லை
எனவே ஆசிரியர்கள் மாணவர்களை தங்களது கடமைகளை பொறுப்புக்களை சரிவர செய்யும் போது ஆசிரிய மாணவர் உறவு பாதிப்படையாமல் பேண முடியும். ஆசிரியர்கள் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் என்ற நோக்கோடு கற்பித்தலில் ஈடுபட வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தமது விருப்பு வெறுப்புக்களை திணிக்காமல் அவர்களின் சுதந்திரத்திற்கு இடமளிக்க வேண்டும். ஆசிரியர் மட்டும் கற்பிப்பதனால் அந்த கற்பித்தல் முழுமை பெற்று விடாது மாணவர்கள் அதைப்பற்றி கலந்துரையாட ஆசிரியர் இடமளிக்க வேண்டும். அத்தொடு மாணவர்களை வெறுமனவே கற்பித்தல் செயற்பாடுகளுடன் முடக்காமல் அவர்களை ஏனைய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் பங்கு பெற இடமளிக்ப்பதோடு அதில் பங்குபெறுமாறு ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக கணணி சார்ந்த பயிற்சிகள் ,விளையாட்டு ,சாரணியர் இயக்கம் போன்றவற்றில் பங்குபெற செய்தல் , நூலக வாசிப்பை மேம்படுத்தல் போன்றவற்றை கூறலாம். வெறுமனே புத்தகக் கல்வியால் மட்டும் ஓரு சிறந்த எல்லாத்துறைகளிலும் திறமைமிக்க ஒரு மனிதனை உருவாக்க முடியாது.
அதிகாரத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதை ஆசிரியர்கள் தவிர்த்தல் வேண்டும். எல்லா மனிதரும் ஓரே திறமையையோ,குணாதிசயங்களையோ கொண்டிருப்பதில்லை எனவே அவர்களுக்கான கற்பித்தல் முறைகளும் மாறுபடலாம். சிலருக்கு கணித அறிவு அல்லாமல் இருக்கலாம் சிலருக்கு கணணி அறிவு இல்லாமல் இருக்கலாம் விளையாட்டில் சிறந்து விளங்கும் ஒரு பிள்ளை கல்வியல் மந்தமாக இருக்கலாம் இவ்வாறு ஓவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் குறைபாடுகள் இருக்கும் எனவே அவர்களுக்கு ஏற்றால் போல் ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளை கையாழ்வது முக்கியமானதாகும். ஆவ்வாறு செயற்படும் பட்சத்தில் வகுப்பறை கற்பித்தல் இடைவினைகள் சிறப்படையும் அதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மேல் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்த வழிசமைக்கும்.
ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஓற்றுமையை ஏற்படுத்த வேண்டுமே தவிர அவர்களுக்கிடையில் பாகுபாட்டை எற்படுத்த வழியமைக்க கூடாது. கல்வி என்ற நோக்கில் ஓவ்வொரு மாணவர்களும் சமமானவர்கள் பால், இன, வர்க்க வேறுபாடுகளை காட்டி வேறுத்துவது தவறாகும். அதுவே அவர்கள் வளந்து இன வர்க்க வன்முறைகளை தோற்றுவிக்க துண்டுகோளாக அமையக் கூடும். எனவே ஆசிரியர்கள் பாகுபாடுகளை மறந்து எல்லோரிடமும் சமத்துவமாக பழகும் போது ஆசிரிய மாணவர் உறவு பலமடையும்.
மாணவர்களும் ஆசிரியர்களை புரிந்து அவர்களின் சொற்படி அவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயற்படும் போது ஆசிரிய மாணவர்களுக்கு இடையில் உறவு வலிமையடையும். மாணவர்கள் செய்யும் ஓவ்வொறு செயற்பாட்டின் விளைவும் அவர்களைக் கற்பித்த ஆசிரியர்களையே பிரதிலிக்கும் என்பதை உணர்ந்து மாணவர்கள் செயற்பட வேண்டும். தட்சனை கொடுத்து கல்வி கற்ற காலத்தில் காணப்பட்ட ஆசிரிய முக்கியத்துவம் இன்றைய இலவச கல்வி முறையில் எப்படி காணப்பட வேண்டும் என்பதை ஒவ்வொரு மாணவரும் சிந்திக்க வேண்டும்.
ஒரு கை மட்டும் தட்டினால் மட்டும் சத்தம் வராது என்பதை ஆசிரியர்களும் மாணவர்களும் உணர வேண்டும். ஆசிரிய மாணவ உறவு நிலை உளவியல் சார்ந்ததாக இருந்தாலும், அது எதார்த்தமானதும் மரியாததை, மதிப்பு மிக்கதாகதாகும். ஆசிரிய மாணவர்களுக்கிடையில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் வீழ்ச்சியடையும் உறவு பலமடையும். அத்தோடு சிறப்பான ஆசிரியர் மாணவர் உறவு ஏற்படும் போது அது சிறப்பானதொரு உலகை கட்டியெழுப்ப வழியமைக்கும். பிளட்டோ போன்ற சிறப்பான குரு இல்லாவிட்டால் அரிஸ்ரோட்டில் எனும் சிறந்த மாமனிதரைப் நாம் பெற்றிருக்க முடியாது. எனவே இவ்வாறான சிறந்த ஆசிரிய மாணவர் உறவை மேலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது எமது அனைவரதும் கடமையாகும். அவ்வாறு செயற்பட்டால் எக்காலத்திலும் எவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட்டாலும் ஆசிரிய மாணவர் உறவில் பிரிவிணையை உண்டாக்க முடியாது என்பது திண்ணம்.
செல்வராசா லோகிதன்
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்.