நனோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை அழிக்கும் ஒளடதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை

நனோ தொழில்நுட்பத்தின் மூலம் புற்றுநோயை அழிக்கும் ஒளடதங்களை உற்பத்தி செய்யக்கூடிய தொழிற்சாலை தென்னிலங்கையின் பயாகல பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 இந்தியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தொழிற்சாலையை நிர்மாணிக்கவுள்ளது.

இந்த தொழிற்சாலை அமைக்க 140 கோடி ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 500 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.