மாணவர்களின் ஆளுமை விருத்தியில் ஆசிரியரின் பங்கும் பணியும்

மாணவர்களின் ஆளுமை விருத்தியில் ஆசிரியரின் பங்கும் பணியும்
பிள்ளைகளின் பன்முகபாங்கான விருத்திக்கு உதவுவதே கல்வியின் பிரதான பங்கு ஆகும் கல்வி செயலொழுங்குகளின் மூலம் எதிர்பர்க்கபடுவது மாணவர்களின் ஆளுமை விருத்தியே இதனை ஆசிரியர் ஏற்படுத்த வேண்டும். ஓரு குறிப்பிட்ட புலத்தில் மாத்திரம் அறிவினை வளங்குவது ஆசிரியரின் கடமை அல்;ல மாணவர்களது உள்ளார்ந்த திறன்களை தன்னியல்பாக வெளிக்கொண்டுவரசெய்து மாணவர்களை பூரணத்துவம் உடையவர்களாக மாற்றுவதும் ஆசிரியர்களின் பொறுப்பும் கடமையும் ஆகும்.


பாடசாலை பிள்ளைகளை வினைத்திறன் உள்ளவர்களாக அவர்களது விளைதிறனை அதிகரிக்கச் செய்யத்தக்க வகையில் அவர்களின் ஆளுமை விருத்திசெய்யப்பட தேவையான பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கல்வி செயலொழுங்குகளின் மூலம் எதிர்பார்கப்படும் மாணவர்களின் சிறந்த அடைவு மட்டமானது பயநுறுதிமிக்க ககுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்ப்பாடுகளின் மூலமே சாத்தியமாகும். பாடசாலைகளில் மாணவர்களின் பன்முக ஆளுமையினை வளர்க்கும் நோக்கில் ஆசிரியர் பல பொறுப்புமிக்க பணிகளை ஆற்ற வேண்டியவராக உள்ளனர் மாணவர்களின் தனிப்பட்ட திறன்களையும் ஆளுமைகளையும் கருத்தில் கொண்டு அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு ஆசிரியர்கள் பல்வேறு வகிபங்குகளை ஆற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.

பாடசாலை 5நு மாதிரி கற்பித்தல் முறைமூலம் மாணவர்களின் உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணர்ந்து ஆளுமைமிக்க கல்வி சமூகத்தினை உருவாக்குவதனயே இக் கற்ப்பித்தல் முறை அமைந்துள்ளது அறிவை மட்டும் பெற்றுக்கௌ;ளல் என்பவற்றிற்கு அப்பால் அறிவுஇ திறன்இ மனப்பாங்கு, பிரயோகம் ஆகிய பண்பு கூறுகளில் விருத்தி ஏற்பட்ட முழுமையான ஆளுமை கொண்டவராக மாணவர்களை மாற்றுவதற்க்காக இக்கற்பித்தல் மாதிரி எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய விடயத்தினை வெற்றிகரமாக
நிறைவேற்றும் பொறுப்பு ஆசிரியரையே சார்ந்தது மாணவர்களை ஆளுமைமிக்கவர்களாக மாற்றியமைக்க ஆசிரியர் ஒருவர் தன்னியல்பான பல ஆளுமை கூறுகளை விருத்தியாக்கி கொள்ள வேண்டும் புதிய அறிவு விருத்தியும்இ தொழில்நுட்ப கருவிகளை கையாள்வதில் பயிற்சியும் எண்ணங்களின் தெளிவான பார்வையும் என தன்னில் மாற்ற நிலைகளை புகுத்த வேண்டியவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர்.

வெறுமனே பாட அறிவை மட்டும் கொண்டவர்கள் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியாது மாறாக பரந்த அறிவுஇ சமூக இசைவுஇ தன்னம்பிக்கைஇ சுறுசுறுப்புஇ விரிந்த சிந்தனைஇ மனதைரியம்இ தலைமைத்துவம்இ தன்னலமற்ற சேவை மனப்பாங்குஇ முகமலர்ச்சிஇ நடுநிலைமை போன்ற பண்புகளை தன்னுள் விருத்தியாக்கி கொள்ள வேண்டும்  ஆசிரியர் வகிபாகம் மாணவர் ஆளுமை விருத்தியில் பிரதான பங்கினை வகித்துள்ளது. கடத்தல் வகிபாகத்தில் ஆசிரியர் தன்னிடமுள்ள அறிவு தொகுதியினை மாணவர்களிற்க்கு கடத்தும் செயற்ப்பாடு மட்டுமே இடம்பெறும் இங்கு மாணவர்களின் ஆளுமை விருத்தியில் எதுவித கவனமும் செலுத்தப்பாடாது கொடுக்கல் வாங்கல் வாங்கல் வகிபாகத்தில் மாணவர்களின் பங்களிப்பு ஓரளவு இருப்பினும் அவர்களது ஆளுமை விருத்தி தொடர்பில் கவனம் செலுத்துவது குறைவு. நிலைமாற்று வகிபாகமே ஆளுமை விருத்தியில் பிரதான பங்கினை வகிக்கின்றது இங்கு ஆசிரியர் ஒரு வளவாளராகவும் மாற்றத்திற்கான முகவராகவும் செயற்படுவார் மாணவர்கள் சுய செயற்பாட்டிற்கு உட்படுத்தபடுவர். இதன் போதுதான் அவர்களது உள்ளார்ந்த திறன்கள் தன்னியல்பாக வெளிக் கொண்டுவரப்படும் எப்போதும் மாணவர் அருகில் ஒட்டிக்கொண்டிருப்பதை வி;ட அவர்களிற்க்கும் ஓரளவு சுயாதீனம் வளங்கி அவர்களை சுயமாக செயற்பட வைத்து அவர்களின் ஆளுமை விருத்திக்கு பங்காற்றவேண்டியுள்ளது.
ஆசிரியர் நிலைமாற்று வகிபாகத்தின் மூலம் மாணவர்களிற்கு ஆய்வு ரீதியான பேறுகளை கண்டுபிடிப்பதற்கான சந்தர்பத்தினை வழங்குகிறார் இதன்போது மாணவர்கள் கூட்டாக சேர்ந்து விடய அறிவினை பெற ஒத்துளைப்பினை வழங்குகிறார். குழுசெயற்ப்பாட்டடின் போது குழுதலைவரை தெரிவு செய்யும் போது ஆசிரியர் தனது தலையீட்டினை தவிர்த்து தலைவர் குழுவில் இருந்து உருவாக சந்தர்பம் வளங்க வேண்டும். விடைய ஆய்வின் போது அனைவருக்கும் வேலைபப்பகிர்வினை ஏற்ப்படுத்தி கொடுத்தல்இ விடய அறிவினை விளக்கமளிப்பதற்க்கு அனைவருக்கும் சந்தர்பத்தினை ஏற்ப்படுத்தி கொடுத்தல் போன்றவற்றினை மேற்க்கொள்ளும் போது மாணவர்களின் திறன் வெளிப்பாட்டிற்கான சந்தர்ப்பத்தினை ஏற்ப்படுத்தி கொள்ள முடியும் இதன்மூலம் சுயகட்டுப்பாடுஇ தலைமைத்துவம்இ தற்துணிவுஇ குழுவாக சேர்ந்து செயர்ப்படும் தன்மை போன்ற ஆழுமை கூறுகளை விருத்திசெய்து கொள்ளமுடியும்

மாணவர்களது தாய் தந்தையரை அடுத்து மாணவர்களிடம் மிக நெருக்கமாகவும் மாணவர்களின் வளர்ச்சியில் அக்கரையுடன் திகழும் ஒரு நபர்தான் ஆசிரியர் எனவே ஆசிரியர்கள் மாணவர்களிடம் அறிவு தேர்ச்சியினை ஏற்படுத்துவது மட்டுமல்லாது சிறந்த ஆளுமை தேர்ச்சியுடையவர்களாக மாற்றி கல்வி சமூகத்திற்க்கு ஒப்படைக்க வேண்டிய பொறுப்பும் ஆசிரியரினுடையது “ இன்றைய சிறுவர்கள் நளைய தலைவர்கள்” எனும் கூற்றுக்கு இணங்க கல்வி சமூகத்தின் நளைய தலைவர்களாக வளர்ந்து கொண்டிருக்கும் மாணவர்களை சிறந்த தலைமைத்துவ பண்பு கொண்டவர்களாக மாற்ற வேண்டிய பொறுப்பு ஆசிரியரையே சார்ந்தது.

பாடசலை கல்வி செயற்ப்பாடுகளின் மூலம் எதிர்பார்கபடுவது மாணவர்களை நற்பிரஜையாக மாற்றுவதேயாகும் இதன் வெற்றி  ஆசிரியரின் கைகளிலே தங்கியுள்ளது கற்றல் என்பது பாடஅறிவினை தெளிவுற பெறுவது மட்டுமல்லாது மாணவர்களது எதிர்கால வாழ்கைக்கு தேவையான சகிப்பு தன்மைஇ தற்துணிவுஇ நேர முகாமைத்துவம்இ தலைமைதாங்கும் பண்பு போண்ற பண்புகள் விருத்தியாக்கப்பட வேண்டும் இதற்கு ஆசிரியர் தன்னாலான பங்களிப்பினை ஆற்றவேண்டியது பொறுப்பாகும்.

ஆளுமை விருத்தியை ஏற்ப்படுத்துவதில் இணைப்பாடவிதான செயற்ப்பாடுகளிற்க்கு பிரதான பங்கு உண்டு அந்தவகையில் தமிழ்த்தின போட்டிஇ பட்டிமண்றம்இ விளையாட்டுப்போட்டிஇ கலை நிகழ்ச்சிகள்இ கண்காட்சிகள்இ மாணவர் மண்றங்கள்இ போண்ற நிகழ்வுகளில் மாணவர்களை பங்குபற்ற செய்து ஆளுமை பண்புகளை வளர்த்தெடுக்கவும் திறன்களை வளர்த்தெடுக்க கூடிய செயற்பாடுகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் ஆசிரியர்கள் தன்னாலன முயற்ச்சியினை மேற்கொள்ள வேண்டும்.

ஆகவே பிள்ளைகளின் ஆளுமை விருத்தி என்பது பன்முக நோக்கு கொண்டது. இவை அனைத்தயும் நன்கு புரிந்து கொண்டவராகவும் தேர்ச்சி உள்ளவராகவும் ஆசிரியர் இருப்பதுடன் கற்றல் கற்ப்பித்தல் சூழலில் பல்வேறு வகிபாகங்களை ஏற்று மாணவர்களது ஆளுமை விருத்தியை உறுதி செய்பவராக காணப்படும் போதுதான் வெற்றியடைந்த ஆசிரியத்துவம் வெளிப்படும்.

நடராஜா பிரதீபன்
கல்வியியல் சிறப்புக்கற்கை,
2ஆம் வருடம்,1ஆம் அரையாண்டு,
கிழக்குப் பல்கலைகழகம்.