தனியாளின் ஆளுமையை வளர்த்தெடுத்து அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்று, சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக கல்வி உள்ளது. தனியாளின் விருத்தி ஏற்படும் போதே சமுதாய விருத்தியும் ஏற்படுகின்றது. பிள்ளைகளை வளப்படுத்தி அவர்களை நற்பிரஜைகளாக சமூகத்தினுள் புகுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலையுடையதாகும். கல்வியினால் வாழ்க்கை முறைகள், செயற்பாடுகள் ஆகியன குறுகியகால இடைவெளியில் மாறிவிடுகின்றன. நாம் கற்றவற்றில் சில விடயங்கள் நமது வாழ்க்கைக்கு பயன்படாத அளவிற்கு, இன்றைய சமூகம் விரைவில் மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் மாறிவரும் விஞ்ஞான தொழிநுட்ப உலகிற்கு பொருத்தமான கல்வியை தொடர்ந்தும் மாணவர்கள் கற்கவேண்டி உள்ளது. இதற்கு பாடசாலையும் சமூகமும் இணைந்து தகுந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் பாடசாலைகள், சிறுவர்களையும், இளைஞர்களையும் சமூகமயப்படுத்தும் முறைசார்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.
பாடசாலை சமூகத்தின் கட்டமைப்பை பொறுத்தே அப்பாடசாலையின் செயற்பாடுகள், வினைதிறன், என்பன அமையும்.சமூக கட்டமைப்பு சிறப்பான முன்னேற்ற நிலையில் உள்ள போது அப்பாடசாலை தொழிற்படும் தரமும் உயர்ந்து விடுகின்றது. மாறாக சமூக கட்டமைப்பானது பலவீனமாக உள்ள நிலையில், விளங்கும் பாடசாலைகள் குறைந்த வினைதிறன், விளைதிறனுடனேயே செயலாற்ற முடிகின்றது. இது சமூகம் எவ்வாறு பாடசாலையை பாதிக்கின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. பாடசாலையும் அது வழங்கும் கல்வியும், கல்விசாரா பங்களிப்பும் சமூக கட்டமைப்பை மாற்றுவதிலும் அதனைத் தூண்டுவதிலும் பாரிய பங்களிப்பை ஆற்றுகின்றது. பாடசாலையில் பாடகலைத்திட்டம் மக்களை அறிவுசார் முன்னேற்றத்திற்கும், இணைக்கலைத் திட்டம் தனியாட்களின் ஆளுமைத் திறனை விருத்தி செய்வதுடன் தலைமைத்துவத்திற்கான பாதையிலும் வழிநடத்துகின்றது. மேலும் பாடசாலை கலாசாரம் எனும் மறைகலைத்திட்டம் மாணவர்களின் சீரான வாழ்வு முறைக்கு வழிகாட்டுகின்றது. பாடசாலை சமுதாய அங்கத்தவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பாரம் பரியமாக கையாளப்படுகின்ற நியமங்கள், பெறுமானங்கள், நம்பிக்கை, விழாக்கள் மற்றம் பாரம்பரியங்களை உள்ளடக்கியதே பாடசாலைக்கலாசாரம் ஆகும். இவற்றின் மூலமும் இதற்கு அப்பாலும் சென்று சமூகத்தின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமை, பலம், முன்னேற்றம் போன்ற வற்றிற்கு பாடசாலையானது வழிகாட்ட வேண்டும்.
சமூகத்தில் உள்ள தனியாட்களின் கடமை, பொறுப்புணர்வுகளை வளர்த்தெடுப்பதில் ஏனைய சமூகநிறுவனங்களுடன் இணைந்து பாடசாலையும் செயற்பட வேண்டும். பாடசாலை இல்லாவிடின் அல்லது அவை தனது கடமைகளை வினைத்திறனுடுடன் ஆற்றாவிடின் குற்றம், ஒழுக்கமின்மை, நேர்மை இன்மை, வறுமை என்பன அதிகரித்து சமூக அமைதியானது நிலைகுலைந்து விடும். எனவே பாடசாலை வினைத்திறனுடன் செயலாற்ற சமூகமும், சமூகம் முன்னேற்றமடைய பாடசாலையும், ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட வேண்டும். பாடசாலை-சமூக தொடர்பானது அவை இரண்டிற்கும் அனுகூலங்களையே ஏற்படுத்தும். பாடசாலையும் சமுதாயமும் இணைந்து செயற்படும் போது அது மாணவர்களின் கல்வி அடைவின் மீது குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், உயர் செயலாற்றுகை கொண்ட பாடசாலைகள் கற்றல்-கற்பித்தல் தொடர்பான, சமுதாயத்துக்கும் பொதுவானதான, தெளிவான நோக்கங்களைக் கொண்டு இருப்பதோடு, பாடசாலைகள் சமுதாய அபிவிருத்திக்கும் வழிவகுக்கும் என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வளவாளர்களின் உதவிகளைப் பெற்றுக் கொண்டு சமுதாயத்தின் வளங்களைப் பயன்படுத்துவதிலும், நவீன சவால்களை எதிர்கொள்வதற்கும், பங்கேற்பு திட்டமிடல் மற்றும் முகாகைத்துவத்திற்கும் ஆய்வுக்கும், தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கும். பாடசாலைகள் சமூதாயத்தின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றன. அந்த வகையில் நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திக்கு சமுதாயத்திற்கு கல்வி வழங்குவது பாடசாலையின் பொறுப்பாகும். மேலும் பாடசாலைச் சமூகத்தை இனங்காண வேண்டியதும் அவசியமாகும்.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலுகின்ற பிள்ளைகளின் பெற்றோர்களே அப்பாடசாலையின் சமுதாயம் என முன்னர் கருதப்பட்டது. எனினும் தற்போது பாடசாலைச் சமூகம், எனும் எண்ணக்கரு பரந்துபட்ட விதமாக நோக்கப்படுன்றது. பாடசாலைச் சமூகம் என்பதற்குப் பதிலாக பாடசாலையின் பயனாளிகள் என்ற பதம் தற்போது பயன்படுத்தப்படுகின்றது. இலங்கை பாடசாலையில் காணப்படும் பிரதான பயனாளிக் குழுக்களாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், சமூதாயத்தலைவர்கள், அலுவலர்கள், அரசியல்வாதிகள், சமயதாபனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் அங்கத்தவர்கள் போன்றோர் விளங்குகின்றனர். பிள்ளைகளின் கற்றல் தேவைகளை பாடசாலைகளினால் மாத்திரம் திருப்திபடுத்த முடியாது என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் முன்பள்ளி, பாடசாலைக் காலங்களிலும், மற்றும் அதற்கு அப்பாலும் அவர்களின் அறிகை மற்றும் சமூக விருத்தியை எண்ணற்ற கற்றல் இணைப்புக்கள் செழுமைப்படுத்துகின்றன. பாடசாலையும் பாடசாலை சாராத கற்றல் அனுசரணைகளான குடும்பங்கள், முன் பிள்ளைப் பருவ நிகழ்ச்சித்திட்டங்கள், பாடசாலை நேரம் தவிந்த மற்றைய நேரங்களில் மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள், உயர் கல்வி, வியாபாரம், நூலகங்கள், சுகநல மற்றும் சமூகசேவை நிறுவனங்கள், அரும் பொருட் காட்சியகம் மற்றும் சமுதாயத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்கள் போன்றனவும் இவ் இணைப்பினுன் உள்ளடங்கப்படுகின்றன. இவ்வாறான பல குழுக்களினால் பிள்ளையின் கற்றலுக்கு வழங்கப்படுகின்ற ஒத்துழைப்பின் வலைப்பின்னலான மிகைநிரப்பு கற்றலானது, பாடசாலை-சமுதாய உறவை வலுப்படுத்தி மாணவர்களின் கற்கும் ஆற்றலையும், கற்றல் பேறுகளையும் மேம்படுத்துகின்றது.
பிள்ளைகளின் கற்றலில் பாடசாலையிலும், வீட்டிலும், குடும்பத்தினர் காட்டும் ஈடுபாடானது, அவர்களின் பாடசாலைத் தரங்கள், மற்றும் பரீட்சைப் புள்ளிகளை அதிகரிக்கச் செய்திருப்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்காக வருதல், சமூகதிறன்களை வளர்த்தல், பட்டப்படிப்புக்குச் செல்லும் வீதத்தை அதிகரித்தல் அத்துடன் இடை நிலைக் கல்விக்கு அப்பாலும் கல்வியைத் தொடருதல் ஆகியவற்றிற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. பாடசாலையுடன் குடும்பத்தின் ஈடுபாடு எனும் போது தன்னார்வத்துடன் அவர்களாகவே இணைந்து மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளே கருத்திற் கொள்ளப் படுகின்றது. அந்த வகையில் பாடசாலையில் இடம்பெறும் கூட்டங்களுக்குச் சமூகமளித்தல், பாடசாலையில் இடம்பெறும் விளையாட்டுப்போட்டி, வருடாந்த பரிசளிப்பு விழா, இலக்கிய மற்றும் நாடகப் போட்டி, பாடசாலைக் கண்காட்சி, மதரீயான வைபவங்கள் போன்ற நிகழ்விற்கு பாடசாலைப் பயனாளிகள் கலந்து கொள்ளுதல் மற்றும் அவற்றிற்குத் தேவையான பௌதீக, நிதி மற்றும் மனித வள உதவிகளை வழங்குதல், வெளிக்கள பிரயாணங்களின் போது பங்கெடுத்தல், பிள்ளைகளின் கல்விசார் விடயங்கள் தொடர்பாக ஆசிரியருடன் தொடர்பில் இருத்தல், போன்றவற்றின் மூலம் சமூகமானது பாடசாலையுடன் தொடர்புறுகின்றது.
பெற்றாருக்கென ஒரு விசேட தினத்தை ஒதுக்கி கலந்துரையாடல், பாடசாலை முன்னேற்றம் தொடர்பாக அறிவிக்கின்ற பாடசாலை அறிக்கை அட்டை மூலமும், ஆசிரியர்கள், மாணவர்களின் வீட்டிற்கு வருகை தந்து அவர்களின் குடும்ப நிலையை அறிந்து அதற்கு ஏற்றாற் போல் மாணவர்களுடன் அணுகுவதன் மூலமூம், கல்விவார நிகழ்ச்சித் திட்டங்களை ஒழுங்கு செய்வதன் மூலமும், மாணவர்களின் அபிவிருத்திக்கும் அவர்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் எவ்வாறு? ஒத்துழைப்பு வழங்குவது என்பது பற்றி பாடசாலையானது குடும்பங்களுக்குத் தகவல் வழங்குதல், அவர்களின் முன்னேற்ம், பாடசாலை நிகழ்ச்சித் திட்டம் பற்றி தகவல் வழங்குதல் மூலமும் பாடசாலை யானது சமூகத்துடன் தொடர்பைப் பேணலாம். மேலும் வீட்டுச் செயற்திட்டம், சமுதாயக் கற்கைகள், சமுதாய செயற் திட்டங்கள், சமுதாய கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள், போன்ற வற்றுடன் பாடசாலையை சமு தாய தேவைக்கான மத்திய நிலையமாக உருவாக்கி பாடசாலை-சமூக உறவினை விருத்தி செய்வதற்குப் பயன்படுத்தலாம்.
பெற்றோர்களின் பங்களிப்பு இன்மை, நிதி தொடர்பான தவறான புரிந்துணர்வு, நேரம் இன்மையும் ஒதுக்காமையும், அலட்சியப் போக்கு, ஆசிரியரின் பங்குபற்றுதல் போதாமை, நிறுவன குறைபாடு, பாடசாலைகள் சமூகத்தின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யாமையும் விலகி இருத்தலும், பாடசாலையுடனான சமூதாயத்தின் இணக்கப்பாடு நலிவடைதல் போன்ற காரணிகளால் பாடசாலை-சமூக தொடர்பு விரிசலடைகின்றது. இவ் விரிசலைக் குறைப்பதற்காக பாடசாலை-சமூக முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை நவீன தொழிநுட்பங்கள், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஏனைய ஆவணங்கள் மூலம் வெளிப்படுத்தல், பண வசூலிப்புக்கன்றி பிள்ளைகளின் அபிவிருத்தி பற்றி கலந்துரையாடுவதற்கே பாடசாலைக் கூட்டங்கள் ஒழுங்கு படுத்தப்படுகின்றன என்பது பற்றி பயனாளிகளுக்குத் தெளிவுபடுத்துதல். கூட்டங்களுக்கான கடிதங்களில் தக்க அறிவுத்தல்களை தெளிவாக குறிப்பிட்டிருத்தல், பாடசாலை-சமூக முக்கியத்துவம் பற்றி ஆசிரியருக்கு விசேட திசைமுக பயிற்சி வழங்குதல், என்பனவற்றினை மேற்கொள்ளலாம்.
UNESCO நிறுவனத்தால் 1970ல் நியமிக்கப்பட்ட சர்வதேச ஆணைக்குழுவின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கான கல்வி எனும் அறிக்கையில் பாடசாலையினுள் இடம்பெறும் முன்னேற்றமானது, பாடசாலைக்கும்-சமூதாயத்துக்கும் இடையிலான வகிபாங்குகளைக் கொண்ட செயன் முறைத் தொடர்புகளுடனேயே நிகழ்வதாகும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பொறுத்தவரையில் பாடசாலை மற்றும், சமூகத் தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் காலத்திற்குக் காலம் பல்வேறு செயற்திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டமையினைக் காணமுடிகின்றது. 1972ல் அறிமுகம் செய்யப்பட்ட தொழில் முன்னிலைப் பாடம், 1976ம் ஆண்டு 100 பிள்ளைகளையும் ஒரு அல்லது இரு ஆசிரியர்களைக் கொண்ட சிறிய பாடசாலை அபிவிருத்தித் திட்டம், 1979ல் பெற்றோர் சாசனம், 1984ல் பாடசாலை மட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை உருவாக்குதல் போன்ற பல செயற்பாடுகளைக் கூறலாம். பாடசாலைக்கு முகாமைத்துவ ரீதியான வலுவூட்டலையும் பாடசாலை சமூகத்துடன் உறுதியான தொடர்பை முன்னெடுத்தலையும், வழங்கும் நோக்குடன் பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமானது (Program for School Development-PSI) கொண்டு வரப்பட்டது. பாடசாலை மேம்பாட்டுக்கு, சமுதாயத்தின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்கான மிக முக்கிய கருவியாக, அண்மைக்காலம் வரையில் பாடசாலை அபிவிருத்திச் சமூகமே விளங்குகின்றது. அதன் விதிகளும் ஒழுங்குமுறைகளும் 01.05.1982ஆம் திகதிய 1982/2ஆம் இல சுற்றுநிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும்2005/24ஆம் இல சுற்றறிக்கையின் படி பாடசாலை மேம்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை அபிவிருத்திக்குழு (School Dvelopment Committee-SDC) அறிமுகப்படுத்தப்பட்டது. பாடசாலையை மேம்படுத்துதல் தொடர்பாக எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கான அதிகாரமும், ஆணையும் அப்பாடசாலைச் சமுதாயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட குழு அங்கத்தவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமது பாடசாலையை மிகுந்த அர்ப்பணிப்போடு வினைத்திறனுடனும், விளைதிறனுடனும் கொண்டு நடாத்துவதற்கு பயனாளிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இங்கு பிரதி/உப அதிபர், இத்துறையில் அறிவுடைய ஆசிரியர் மற்றும் பெற்றோர் உள்ளடங்கலாக மூன்று நபர்களைக் கொண்ட தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றை அமைத்தலும் எதிர்பார்க்கப் படுகின்றது. 2006/24 ஆம் சுற்றறிக்கையின் படி அதிகாரம், தீர்மானம் எடுப்பது தொடர்பாக பாடசாலை முகாமைத்துவ குழுவும், பாடசாலை அபிவிருத்திக் குழுவும் இணைந்து பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் பாடசாலையும் சமூகமும் இணைந்து பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே எதிர்பார்க்கப்படுகின்றது எனலாம். இவ்வாறு பல செயற்திட்டங்கள் கொண்டுவரப்பட்டு பாடசாலை-சமூக தொடர்புகள் விருத்தியாக்கப்படுகின்றது.
பாடசாலை ஆனது சமுதாயத்தில் இருந்து விலகாமலும், சமுதாயமானது பாடசாலையின் சகல செயற்பாட்டிற்கும் உறுதுணையாகவும் இருந்தும், பாடசாலை-சமூக உறவை விளங்கிக் கொண்டு மேம்படுத்துவதன் மூலம் கற்பித்தல் செயற்பாடுகளை விருத்தி செய்யலாம். சமூகங்களுக்கான முன்னேற்றம் முழுவதும் வெளியிலிருந்து நகர்த்தக் கூடியது அல்ல மாறாக சமூகங்களிலிருந்தே பாடசாலையுடன் சேர்ந்து முனைப்புடன் பரவ வேண்டியதாகும் என்பதை உணர்ந்து பாடசாலை-சமூக தொடர்பை வலுப்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும்.
சு.சாம்பவி,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை,
கல்வி பிள்ளைநலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.

.jpg)
.jpg)