(ச.அக்ஷயன் )
சூறாவளி அல்லது புயல் காற்று வீசுகின்றபோது எவ்வாறான தயார்படுத்தல்களை மேற்கொள்ள வேண்டும் என்ற விடயத்தை தெளிவுபடுத்துகின்றது.
சூறாவளி ஏற்படுவதற்கு முன்னரான தயார்படுத்தல்கள்
• சூறாவளி காரணமாக பலமான காற்று, மழைவீழ்ச்சி , வெள்ளப்பெருக்கு முதலிய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும். எனவே திடீர் சூறாவளி ஆபத்திற்கு முகம்கொடுக்கக்கூடிய நிலையில் உங்களுடைய வசிப்பிடம் மற்றும் வீட்டுச் சூழலை வைத்திருத்தல். கதவுகள், யன்னல்கள், கூரைகள் முதலியவற்றை உறுதியாக்குதலும் அருகிலுள்ள ஆபத்தான் மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டிவிடுதலும்.
• உங்களுடைய குடும்ப தயார்படுத்தல் திட்டத்தை மீளாய்வு செய்தல். அனர்த்தத்தை இனங்காணலும் அனர்த்தம் பற்றிய தெளிவான விளக்கத்தை கொண்டிருத்தலும். குறிப்பாக புயலானது 3 கூறுகளைக் கொண்டது. முதலில் மழையும், பின்னர் பலமான காற்றும் மழையும், பின்னர் நிசப்தமும் நிலுவும். அதன் பின்னர் மீண்டும் பலமான காற்றுடன் மழை உருவாகும், அதன் பின்னர் மழை பொழிந்தே இறுதியில் சூறாவளி கடந்து செல்லும்.
• குடும்ப தொடாபாடல் திட்டம் ஒன்றை நிறுவியிரு;தல். குறிப்பாக ஆபத்தான நிலையில் உதவக்கூடிய தொலைபேசி இலக்கங்கள், வைத்தியசாலை அவசரக் காவி இலக்கங்கள், அவசர நிலையில் அரச அதிகாரிகளுக்கு அறிவிப்பதற்கேற்ற இலக்கங்கள் ஆகியவற்றை வைத்திருப்பதுடன், அவற்றை வன், மென் பிரதிகள் என்ற வகையில் ஒவ்வொருவரும் வைத்திருத்தல்.
• அவசர தேவைப் பொருட்களுடனான அவசர பொதியை உருவாக்கி வைத்திருத்தல். குறிப்பாக நீர், உணவு, படுக்கை விரிப்புக்கள், வானொலி, டோர்ச்லைட், மேலதிக மின்கலங்கள், மின்ஏற்றிகள், முக்கியமான ஆவணங்கள், மாத்திரைகள், மேலதிக பணம், மாஸ்க்ஸ், பைகள், குறடு முதலிய கருவிகள், நிலவரைபடங்கள், கையடக்கத தொலைபேசிகள், முதலுதவி பெட்டியின் உள்ளடக்கங்கள், கோப்பைகள், தீப்பெட்டி முதலியவற்றை உள்ளடக்கி ஒரு அவரச கொண்டு செல்லல் பொதியை தயார்நிலையில் ஒவ்வொருவருக்கும் வைத்திருத்தல்.
• அவசர நிலையில் குடும்பத்துடன் வெளியேறி பாதுகாப்பாக தங்கக்கூடிய ஒரு திட்டத்தை வைத்திருத்தலும், ஆறுகள், ஆபத்து நிலையிள்ள பாலங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறி பாதுகாப்பாக தங்கியிருத்தல்.
• சொத்துக்களை பாதுகாப்பாக வைத்திருத்தல். குறிப்பாக கூரைகளை மூடியிருத்தல்,
• தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம், உடனடி செய்தி வலைப்பின்னல் மற்றும் ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்படும் விடயங்களை தெளிவாக அவதானித்துக் கொண்டிருத்தல். குறிப்பாக குழப்பமடையாது புயல் தாக்கும் நேரம் பிரதேசம் முதலிய விடயங்களை அறிந்து வைத்திருத்தல்
சூறாவளியின் போதான நடவடிக்கைகள்
• தொலைக்காட்சி, வானொலி, இணையத்தளம், உடனடி செய்தி வலைப்பின்னல் மற்றும் ஒலிபெருக்கிகளில் அறிவிக்கப்படும் விடயங்களை தெளிவாக அவதானித்துக் கொண்டிருத்தல். புயல் தொடருமா அல்லது நகர்ந்து விட்டதா என்பதை உறுதிப்படுத்துவதற்கும் நிகழ்வின் நிலை பற்றியும் அறிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்கு செயற்படல்.
• அவசர நிலைமையில் வெளியேற வேண்டிய அவசியம் மற்றும் தேவையாயின் அதற்கேற்ற வெளியேறத் தயார்நிலையில் இருத்தல். குறிப்பாக மாற்று வழிக் கதவுகள் மற்றும் இடங்களை வைத்திருத்தல்.
• பெறுமதியான மற்றும் முக்கியமான (அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பரீட்சைப் பெறுபேறுகள், நியமனக் கடிதங்கள் முதலியன) முக்கியமான ஆவணங்களை மிகப் பாதுகாப்பான உறையினுள் வைத்திருத்தல் அத்துடன் முடியுமானால் அவற்றை ஸ்கான் அல்லது படம் எடுத்து மின்னஞ்சல் அல்லது வேறு யாராவது தெரிந்த நபருக்கும் அதன் பிரதிகளை அனுப்புதல்.
• வீட்டினுடைய மின் இணைப்பு மற்றும் மின்சாதனங்களின் பாவனையை சரியான முறையில் கையாளல். குறிப்பாக மரங்கள்விழல், அல்லது மின்கசிவு ஏற்பட்டால் மின்தொடர்பi நிறுத்துதல
• வீட்டின் குடிநீர் மற்றும் கழிவகற்றலுக்குத் தேவையான நீரை கலன்களில் நிரப்பி தொடர்ச்சியான நீர் இருப்பை உறுதிப்படுத்தல்.
• காய்நத நிலையில் விறகு அல்லது வாயு அடுப்புக்களை வைத்திருத்தல்.
• வீட்டில் பாதுகாப்பான ஒரு அறையில் தங்கிருத்தல். குறிப்பாக பலவீனமற்ற கூரைகள், கதவுகள் ஆகியவற்றிலிருந்து தள்ளியிருத்தல். சிறிய குழந்தைகள், முதியோர்களை பலமான மேசைகளின் கீழே பாதுகாப்பாக தங்க வைத்தல்.
• தடுமாற்றம் இன்றியும், குடும்ப உறவினர்களின் கவலை மற்றும் பதட்டமற்ற நிலைய உருவாக்கி மகிழ்ச்சியாக இருத்தல்.