ஏறாவூர்ப் பிரதேசத்தில் அறுபது வயதிற்குக்கூடிய 884 பேருக்கு சைனோபாம் கொரோனா தடுப்பூசி!



(ஏறாவூர் நிருபர் நாஸர்)
ஏறாவூர்ப் பிரதேசத்தில் அறுபது வயதிற்குக்கூடிய 884 பேருக்கு சைனோபாம் கொரோனா தடுப்பூசி இன்று 10.06.2021 வழங்கப்பட்டது.

ஏறாவூர்ப் பிரதேசத்தில் அதிகூடிய எண்ணிக்கையிலானோர் இன்றையதினம் தடுப்பூசியை ஏற்;றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி சாபிறா வசீம் முன்னிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் மீராகேணி கிராம சேவகர் பிரிவிலுள்ள 508 பேர் மாக்கான் மாக்கான் தேசிய பாடசாலை நிலையத்திலும் ஏறாவூர் - 3 கிராம சேவையாளர் பிரிவிலுள்ள 376 வயோதிபர்கள் ஏறாவூர் அல்- ஜுப்ரிய்யா பாடசாலை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலையத்திலும் தடுப்பூசியினை ஏற்றிக்கொண்டனர்.

வயோதிபர்களில் அதிகமான பெண்கள் தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதற்கு வருகைதந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இத்தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.