இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் யாழிற்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (ஞயாயிற்றுக்கிழமை) விஜயம் செய்யவுள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் இலங்கையில் தங்கியிருக்கும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
அதேபோல் இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளராக பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது