கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் மீண்டும் பிரித்தானியாவிற்கு அனுப்பும் இலங்கை!பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த கழிவுகள் அடங்கிய 45 கொள்கலன்கள் இன்று (திங்கட்கிழமை) மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மனித கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கை வந்ததை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ் குறித்த கொள்கலன்கள் இன்று திருப்பி அனுப்பப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள CITC முனையத்தில் இருந்து குறித்த கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி செய்ய்யப்படும் என சுங்க திணைக்கள ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.