அவுஸ்ரேலியாவினால் இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசி நன்கொடை !


அவுஸ்ரேலியா இலங்கைக்கு 600 மெற்றிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த அரிசியின் பெறுமதி சுமார் 15 மில்லியன் டொலர்களாகும் என்றும் இது எதிர்காலத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்றும் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் தற்போதுள்ள உறவுகளை மேலும் விரிவுபடுத்தவும் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஆதரவை வழங்கவும் நம்புவதாகவும் அவுஸ்ரேலியா மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய உணவு பாதுகாப்பு நிதியத்திற்கு 2.9 பில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.