83 வயதுடைய தந்தையை கத்தியால் குத்தி கொன்ற 43 வயதான மகன்!


83 வயதுடைய தந்தையை கத்தியால் குத்தி கொன்றதாக கூறப்படும் 43 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

மினுவாங்கொட வாகொவ்வ பகுதியில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.