பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் முன்னிலை!


(ரவிப்ரியா)

மட்/ பட்டிருப்பு வலய பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ் பெண்கள் பாடசாலையில் இருந்து 2022க்குரிய புலமைப் பரிசில் பரிட்சையில் தோற்றிய 48 மாணவர்களில் 18 மாணவர்கள் வெட்டுப்பள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றனர். 

விபரம் பின்வருமாறு.
ஜே.றித்திகேஷ் எஸ்.விசாலி ஆகிய இருவரும் 169 புள்ளிகளைப் பெற்று பாடசாலையில் முதல் இடத்தில் இருக்கின்றார்கள். கே.லிஷனன் 165 புள்ளிகள் பெற்று பாடசாலையில் 2ம் இடத்தைதைப் பெற்றுள்ளனர் ஆர்.கிறிஸ்வின் ஜே.இனியா கே.ஆன்யாமிஷேல் பி.லத்திக்கா கே.மிஷாரி. ஆகிய 5 மாணவர்களும் தலா 158 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

மற்றும் எம்.தேதாரணி 157 புள்ளிகளையும், பி.நிஷர்திக்கா அலைனா 156 புள்ளிகளையும் கே.அக்ஷயா, எஸ்.ஷாருகி ஆகிய இருவரும் தலா 155 புள்ளிகளையும் ஜே.குபேஷன் ஆர்.தனுஸ்றி ஆகிய இருவரும் தலா 149 புள்ளிகளையும், ஆர்.கனிஷ்கா, ரி.ஹிர்திக் ஆகிய இருவரும் தலா148 புள்ளிகளையும் ஐ.சஜிதன் 145புள்ளிகளையும்; பி.ஸப்தனா 143 புள்ளிகளையும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இப் பாடசாலை ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையில் தொடர்ந்து சாதித்து வருவதையும் இம்முறை கொரோனா காலத்தில் மாணவர்களின் பரீட்சை பாதிக்காதிருக்க இணையதத்தள கல்வி வசதியையும் நேரடியாக ஆசிரியர் தவமும் இணையவழி மூலம் கோழும்பிலிருந்து ஆசிரியயை சாந்தினியும். (இருவரும் ஊதிபம் ஏதுன்றி) உதவியதாகவும் அதிபர் பி.கமலதாசன்;, மற்றும் முன்னாள் அதிபர் எம்.சந்திரசேகரம் ஆகியோர்;; சிறந்த வழிகாட்டிகளாகவும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே இந்த வெற்றியின் திறவுகோலொன பெற்றோர் இவர்களை வெகுவாகப் பாராட்டுன்றனர்.

பாடசாலை மட்டத்தில் முதலிடத்தில் உள்ள மாணவர்கள் இருவரும் அவர்களின் பெற்றோரும் பெறுபேறு பற்றி தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு, 

விஞ்ஞானியாக வருவதே என் இலட்சியம்!.
புhடசாலை மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற பெரியநீலாவணையைச் சேர்ந்த ஜெ.றித்திகேஷ் (169);  தனது பெறுபேறு பற்றி பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

தனது வெற்றிக்கு கட்டாரில் தொழில் புரியம் தந்தை ஜெயக்குமாரும் மருத்தவ மாதுவாக தொழில் புரியும் தாய் சங்கீதாவும் அண்ணாவும் அதிபர் ஆசிரியர்களும் குறிப்பாக தவம் ஆசிரியரும் எனது வெற்றிக்கு பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

பரீட்சையில் தவறிய மாணவர்கள் கவலையை கைவிட்டு கடின முயற்சி எடுத்தால் வெற்றி பெறலாம் என்று குறிப்பிட்டார்.

எனது எதிர்கால இலட்சியம் சிறந்த விஞ்ஞானியாக வருவதே. அதற்கெற்றவாறு கல்வியைத் தொடர்வேன் என்று குறிப்பிட்டார். அவரது தாயார் சங்கீதா தனது மகன் றித்திகேஸ் பற்றி குறிப்பிடகையில்,

நேர முகாமத்துவத்தை வீட்டிலும் பாடசாலையிலும் சிறப்பாக பேணும் ஒழுக்கசீலன் என பெருமையாக கூறியதுடன் படிப்புச் சம்பந்தமாக நாங்கள் எதுவும் சொல்லாமலே கீழ் பணிவுடன் சுயமாக படிப்பில் போதிய கவனம் செலுத்தியதால் இந்த இலக்கை அடைந்துள்ளார். அவருடைய ஆற்றலால் எப்படியம் 190 புள்ளிகளுக்கு குறையாமல் எடுப்பார் என எதிர்பார்த்தோம். ஏனினம் தற்போதைய பெறுபேறு பற்றி திருப்தியடைகின்றோம் என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

வைத்தியபீட விரிவுரையாளராக வருவதே எனது இலட்சியம!;
பாடசாலையில் 169 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மற்றமொரு மாணவியான சு.விசாலி தனது பெறுபேறு பற்றி குறிப்பிடுகையில் மாதா பிதா குரு தெய்வம் என்பதற்கமைய எனது தந்தை கிழக்கு மாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் கோ.சுஜிதரன், மக்கள் வங்கி உத்தியோகத்தரான எனது தாயார் சு.சுபாஜினி மற்றும் பாட்டி ஆகியோரின் அன்பும் அரவணைப்பும், எனது வெற்றிக்கு முக்கிய காரணம்.

புரதானமாக எங்கள் அதிபர் முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்பக்களை இரவில் பாடசாலையிலேயே நடாத்திய தவம் சேர் மற்றும் கொழும்பிலிருந்து இணைய வழி கல்வியூட்டிய ஆசிரியை சாந்தினி ஆகியோர் எனது வெற்றியின் பங்காளிகளாகும்.

எனது முக்கிய இலட்சியம் வைத்திய பீட விரிவுரையாளராக வரவேண்ம் என்பதே. அதற்கான கல்வி படிமுறைகளைத் தாண்டுவதற்கு முழு முயற்சி எடுப்பேன்.

பரீட்சையில் தவறிய ஏனைய சக மாணவர்கள் பாடங்களை படிக்கும் போதே விளங்கிக் கொண்டு படிக்க வேண்டும். விளங்காத விடயங்களை உடனுக்குடன் ஆசிரயர்களிடம் கேட்டு தெளிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பழகிக் கொண்டால் இலகுவாக பரிட்சைகளுக்கு முகம் கொடுக்கலாம். ஏன்று கறிப்பிட்டார்.

தனது மகளின் பெறுபேறு பற்றி பொறியியலாளர் சுஜிதரன் கருத்து தெரிவிக்கையில் பெறுபேறு சந்தோஷமளிக்கின்றது. அவர் இணைய வழி கல்வியில் முழுமையாக ஈடுபட்டார். எவ்வாறு பாடசாலை வகுப்புக்களில் கவனம் செலத்துவாரோ அதே போலவே வீட்டை பாடசாலையாக கருதி அதே ஒழுக்கத்துடன் இணையத்தில் இணைந்து கொள்வார்.

அவர் வெட்டுப் புள்ளிக்குமேல் எடுத்தால் போதும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே சுயமாக முயற்சித்தார். நாங்களும் அதே நிலைப்பாட்டிலேயே இருந்தோம். பிரத்தியேக வகுப்பில் அவர் கலந்து கொள்ள விரும்பவில்லை. நாமும் அதுபற்றி மென்மையான அமைதியான சுபாவம் கொண்ட அவருக்கு நிர்ப்பந்தமோ அழுத்தமோ கொடுக்கவில்லை. சுயமாக சுதந்திரமாகப் படிப்பதற்கான வீட்டு ஒழுங்குகளை மட்டுமே செய்து கொடுத்தோம். ஆவர் மனம் கோகாமல் நடந்து கொண்டோம்

ஏனினும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் முன்னாள் அதிபர் ஆசிரியர்களான தவம் மற்றும் சாந்தினி (இணையவழி கற்கை) ஆகியோரின் ஊதிபமற்ற சேவை மற்றும் பாட்டியின் முழுமையான அரவணைப்பு என்பனவற்றுடன் மகள் விசாலியின் அளவான சுயமுயற்சியுமே இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது என்பதை நன்றியுடன் நினைவு கோருகின்றோம். ஏன்று குறிப்பிட்டார்.