நடமாடும் விலைமாது போல் மனைவியை நடிக்கச் செய்து பலரிடம் கொள்ளை : தம்பதி உட்பட நால்வர் கைது!


நடமாடும் விலைமாது போல் மனைவியை நடிக்கச் செய்து பல்வேறு பரிடம் ஏமாற்றி, வெறிச்சோடிய இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி உட்பட நால்வர் மொரட்டுவை மோதர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேக நபர் ஒருவரை விசாரணை செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்ட பெண், அவரது கணவர் நண்பர் மற்றும் நண்பரின் தாயார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையிடப்பட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைத்து பணத்தைப் பெறச் சென்றபோதே சந்தேகநபர் ஒருவரின் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஐஸ் போதைக்கு அடிமையான ஒருவரும் காணப்படுவதாக பொலிஸார் கூறினர்.