தாயில்லாத வறுமை நிலையில் திருகோணமலை சேருவில சகோதரமொழி மாணவன் தமிழ்மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றி 156 புள்ளிகளைப் பெற்று சித்தி!


(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்விக்கு வறுமையும் மொழியும் தடையில்லை என்பதை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றி 156 புள்ளிகளைப் பெற்று நிரூபித்த திருகோணமலை சேருவில பிரதேச சகோதரமொழி மாணவன் குசும் லக்மால்.

திருகோணமலை,சேருவில பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தெஹிவத்த சிங்கள கிராமத்தைச் சேர்ந்த நிகால் ரத்நாயக குசும் லக்மால் என்ற சிங்கள மாணவன் தாயில்லாத நிலையில்,தந்தையின் முறையான பராமரிப்பின்றி மூதூர் கல்வி வலயத்திற்குட்பட்ட மீன்காமம் வித்தியாலயத்தில் கல்வி கற்று அண்மையில் நடந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றி 156 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளமை பலரதும் பாராட்டைப்பெறும் நிகழ்வாக அமைந்துள்ளது.