கோப் குழுவின் பெண் அதிகாரியிடம் பாலியல் இலஞ்சம் : குழுவின் தற்போதைய தலைவருக்கும் தொடர்பு : பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே!

கோப் குழுவின் முன்னாள் தலைவர் கோப் குழுவின் பெண் அதிகாரியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பாரதூரமானது.

இந்த குற்றச்சாட்டால் ஒட்டுமொத்த தலைவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே முறையான விசாரணை செய்து உண்மையை பகிரங்கப்படுத்துங்கள் என கோப் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித ஹேரத் சபையில் வலியுறுத்தினார்.

கோப் குழுவின் முன்னாள் தலைவர்கள் கௌரவமான முறையில் செயற்பட்டார்கள். கோப் குழுவின் தற்போதைய தலைவர் நான் முன்வைத்த குற்றச்சாட்டுடன் தொடர்புப்பட்டுள்ளார்.

முறையான விசாரணை செய்யுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின் போது ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய சுயாதீன உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்

கோப் குழுவின் முன்னாள் தலைவர் கோப் குழுவின் பெண் அதிகாரியிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே சபையில் குறிப்பிட்டார். இது பாரதூரமானதொரு குற்றச்சாட்டாகும்.

 கோப் குழுவின் தலைவராக கடந்த காலங்களில் நான்  பதவி வகித்தேன் அதேபோல்  தற்போதைய நீதியமைச்சர்   விஜயதாஸ ராஜபக்ஷ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.யு குணசேகர உட்பட பலர் பதவி வகித்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் கோப் குழுவின் கௌரவத்தை பாதுகாத்து குழுவின் நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னெடுத்தார்கள்.

ஹேஷா விதானகே எந்த அடிப்படையில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பதை நான் அறியவில்லை.ஆனால் அவர் முன்னாள் தலைவர் என்று குறிப்பிட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் ஒட்டுமொத்த தலைவர்களையும் தவறாக சித்தரிக்கும் வகையில் கருத்துக்கள் பறிமாற்றப்படுகிறது.ஆகவே  இந்த குற்றச்சாட்டு தொடர்பில் முறையான விசாரணையை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்துங்கள் என்றார்.

இதன் போது எழுந்து உரையாற்றிய  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஹேஷா விதானகே இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் என்னுடன் உரையாடினார்.வாயில் விரல் வைத்து சைகை மூலம் அறிவுறுத்தல் விடுக்கும் கோப் குழுவின் தலைவர் தலைமையிலான குழுவில்  இவ்விடயத்தை குறிப்பிட முடியாது என்பதால் சபையில் அறிவித்தேன்.

கோப் குழுவின் முன்னாள் தலைவர்கள் குழுவின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் சிறந்த முறையில்  செயற்பட்டார்கள்.முன்வைத்த குற்றச்சாட்டுடன் கோப் குழுவின் தலைவர் தொடர்புப்பட்டுள்ளார்.ஆகவே  முறையான விசாரணை நடத்துங்கள் என்றார்.

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில்  விமர்சிக்க எவருக்கும் உரிமை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வும் தாம் நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொருளாதார பிரச்சினை தொடர்பில் சபையில் கருத்துக்களை வெளியிடும்போது மத்திய வங்கி விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் சம்பந்தப்பட்ட விடயத்தையும் அமைச்சர் பந்துல குணவர்தன தமது விளக்கத்தின் போது குறிப்பிட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

உண்மையில் அந்த விடயமும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால்  இந்த தீர்ப்பு வேறு விதமாக அமைந்திருக்கலாம். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதாக குறிப்பிடப்பட்டது. அதை சிலர் உறுதிப்படுத்தினார்கள். எனினும் எவரும் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை.

அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தால் அதுவும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது என்றும் குறிப்பிட்டிருக்க முடியும். 88, 89 காலகட்டங்களில் நாட்டிலுள்ள வளங்களை தீவைத்துக் கொளுத்தியவர்கள், ரயில் மற்றும் பஸ்களை தீ வைத்தவர்கள், மனிதப் படுகொலையை செய்தவர்கள், கப்பம் பெற்றவர்கள் ஆகியோரும் இந்த வழக்கோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அதனால் இந்த விடயத்தை வேறு விதமாக திசைதிருப்ப இடமளிக்கக் கூடாது என தெரிவித்தார்.