
ஓய்வுபெற்றவர்களின் நலன்புரி மற்றும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட 2500 ரூபாவானது ஜனவரி மாதம் முதல் வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தெரணியகலை நகரில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.












