சேவைகளைப் பெறுவது தொடர்பில் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் வெளியிட்ட தகவல்!


எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்திலும் சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்காக தொலைபேசி இலக்கமும் இணையத்தளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.