போதை மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு : பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ!


போதைப் பொருட்களுக்கு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய தட்டுப்பாடு காரணமாக போதை மாத்திரைகளைா் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது இது தொடர்பான தகவல்கள் தெரிய வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் கடந்த நாட்களில் 3,63,438 போதை மாத்திரைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

யுக்திய நடவடிக்கை காரணமாக பெருந்தொகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் போதைப்பொருள் கடத்தல்காரர்களும் அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.