அவுஸ்திரேலிய பெண் பிரஜை மீது மசாஜ் நிலைய ஊழியர் பா லி ய ல் து ஷ் பி ர யோ க முயற்சி!




அவுஸ்திரேலிய பெண் பிரஜையை கடுகண்ணாவை பிரதேசத்தில் இயங்கும் மசாஜ் நிலையத்தில் வைத்து, அதன் ஊழியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில், அந்த பெண் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் நேற்று (10) முறைப்பாடு அளித்துள்ளார்.

கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் வீதியில் கடுகண்ணாவை பிரதேசத்திலேயே குறித்த மசாஜ் நிலையம் இயங்கி வருகிறது.

தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியர் தொடர்பில் முறைப்பாடளிக்க, அவர் கடுகண்ணாவையிலிருந்து நுவரெலியாவுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் அளித்த முறைப்பாடு குறித்து நுவரெலியா பொலிஸார் கண்டி, கடுகண்ணாவை பொலிஸாருக்கு தெரிவித்து, சுற்றுலா பொலிஸாரின் உதவியுடன் மேலதிக விசாரணைகள் தொடர்வதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.