வெல்லாவெளி விவேகாநந்தம் அவர்களின் 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுதி வெளியீடு

(சித்தா)
போராதனைப் பல்கலைக் கழகத்தின் 1977 – 1978 காலப்பபகுதில் கலைப்பீடத்தில் பயின்ற நண்பர்கள் அணியின் அனுசரணையில் வெல்லாவெளி விவேகாநந்தம் அவர்களின் 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுதி எதிர்வரும் 03.03.2024 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு களுதாவளை கலாசார மண்டபத்தில் வெளியிடப்படவுள்ளது. 
தேசியக் கலைஞர் கலாநிதி எஸ்.கோபாலசிங்கம் (வெல்லவூர்க் கோபால்)  தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வின் முதன்மை அதிகளாக வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன், முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், பேராதனைப் பல்கலைக் கழகம், பேராசிரியர் மா.செல்வராசா, வேந்தர் கிழக்குப் பல்கலைக்கழகம், கலாநிதி.ம.அல்பிரட், முன்னாள் வணிக முகாமைத்துவப் பீடாதிபதி, பேராதனைப் பல்கலைக் கழகம், பேராசிரியர் க.இராஜேந்திரம், புவியியல் துறை, கிழக்குப் பல்கலைக் கழகம் 
கௌரவ அதிதிகளான  இமெல்டா சுகுமார், முன்னாள் யாழ்ப்பாண அரசாங்க அதிபரும், சமூகசேவைகள் அமைச்சின் செயலாளரும், க.கருனாகரன் முன்னாள் மட்டக்களப்பு அரசாங்க அதிபர், சட்டத்தரணி மு.கணேசராசா, முன்னாள் பிரதி ஆணையாளர் நாயகம், இறைவரித் திணைக்களம்;, சட்டத்தரணி வி.சிவப்பிரியா, பிரதேச செயலாளர், களுவாஞ்சிகுடி, எந்திரி த.இராமச்சந்திரன், பிரபல பாலங்கள் வடிவமைப்பு பொறியிலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, சட்டத்தரணி கி.புண்ணியமூர்த்தி, பீடாதிபதி, கல்வியற் கல்லூரி, அட்டாளைச்சேனை, எஸ்.பாஸ்கரன், முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்,  எஸ்.மனோகரன், முன்னாள் கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர், கு.பாஸ்கரன், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர், வே.மயில்வாகனம், முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர், கலாநிதி எஸ்.தில்லைநாதன், மட்டக்களப்பு, கலாநிதி முருகு தயாநிதி, முதுநிலை விரிவுரையாளர், தேசிய கல்வி நிறுவகம். ஆகியோரும் கலந்து வெளியீட்டினை சிறப்பிக்கவுள்ளனர்.
மேற்படி 'உமிச்சட்டி' சிறுகதைத் தொகுப்பானது தினகரன் வாரமஞ்சரி, வீரகேசரி வாரமலர், ஞானம் சஞ்சிகை, இனிய நந்தவனம் சஞ்சிகை போன்றவற்றில் வெளிவந்தவற்றின் தொகுப்பாக வெளிவரவுள்ளது. இதற்கான ஆசிச் செய்தியினை பேராசிரியர் மா.செல்வராசா, வேந்தர், கிழக்குப் பல்கலைக்கழகம், அணிந்துரையினை வாழ்நாள் பேராசிரியர் வ.மகேஸ்வரன், முன்னாள் தமிழ்துறைத் தலைவர் பேராதனைப் பல்கலைக்கழகம், வாழ்த்துரையினை முத்துலிங்கம் மாலினி, அவுஸ்ரேலியா, பின்னுரையினை கலாநிதி கவிக்கோ வெல்லவூர்க் கோபால் போன்றோர் வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.