உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைந்தது !


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையானது நேற்று புதன்கிழமை (24) குறைவடைந்து 87 டொலர் வரை பதிவாகியுள்ளது.

இதன்படி, பிரண்ட் மசகு எண்ணெய் பீப்பா ஒன்றின் விலை 87.92 டொலராக பதிவாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தை கருத்தில் கொண்டு உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து 90 டொலர் வரை காணப்பட்டதோடு , பங்குகள் அதிகரிப்பின் காரணமாக உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை குறைவடைந்துள்ளது.