மட்டக்களப்பில் காணாமற்போன மாணவன் சடலமாகக் கண்டெடுப்பு !


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவுப் பகுதியைச் சேர்ந்த மாணவன் காணாமற் போயிருந்த நிலையில் நேற்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் பெரியபோரதீவிலிருந்து களுவாஞ்சிக்குடிக்கு தனியார் வகுப்புக்கு சென்ற மாணவனே இவ்வாறு காணாமற்போன நிலையில் பட்டிருப்பு பாலதிற்கு கீழான ஆற்றுப்பகுதியிலிருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் வீட்டிலிருந்து களுவாஞ்சிகுடிக்கு தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறிச்சென்ற மாணவன் வீடு திரும்பாத நிலையில் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுத்த பொலிஸார் நேற்று குறித்த மாணவனின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

இந்நிலையில் க மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்கான மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.