லாப் எரிவாயு விலை குறைப்பு !



லாப் சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 4,115 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 248 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.