மாடியிலிருந்து வீழ்ந்து பெண் உயிரிழப்பு !


கம்பளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பிஹில்லதெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து வீழ்ந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை , பிஹில்லதெனிய பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் பிஹில்லதெனிய பகுதியில் உள்ள வீடொன்றின் முதலாம் மாடியிலிருந்து வீழ்ந்து காயமடைந்துள்ள நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.