வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் அன்னதான நிகழ்வு !


(ரூத் ருத்திரன்)

வெசாக் தினத்தை முன்னிட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.லசந்தபண்டார மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கான அனுசரனையை சமூகசேவையாளர் காராளசிங்கம் சகாதேவா வழங்கிருந்தார்.இதன்போது வீதியால் சென்ற பொதுமக்களுக்கு மதிய உணவு பார்சல்கள் வழங்கப்பட்டது.மக்கள் நீண்ட வரிசையில் நின்று அவற்றினை ஆர்வத்துடன் பெற்றுக்கொண்டனர்.இந் நிகழ்வில் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எல்.எம்.ஜமீல் கலந்து கொண்டார்.