துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது !


உறுவ, ஒமரகடவல பிரதேசத்தில் நபர் ஒருவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் உறுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடையவர் ஆவார் .

சந்தேக நபர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக பதவிய பொலிஸார் தெரிவித்தனர்.